பாகுபலி படம் வந்தபோது அதில் பிரபாஸ் சிவலிங்கத்தை தூக்கிச் செல்லும் போது யாரு இது யாரு இது என்ற பாடல் ஒலிக்கும். அந்தப் பாடலின் இசையும், காட்சிப் படுத்திய விதமும், மலையில் இருந்து விழும் நீர்வீழ்ச்சிக்கு மத்தியில் நம்மையும் கொண்டு நிறுத்திவிடும்.


சரி அது தனி டிபார்ட்மெண்ட். இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம். பிரபாஸ் பாகுபலியா சிவலிங்கத்தை தூக்கியது போல் ஒரு பெண் பெரிய மலைப் பாம்பை தோலில் தூக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி 2.3 மில்லியன் பார்வைகளைக் கடந்து சென்றுள்ளது. @thereptilezoo என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் அந்த வீடியோ வெளியாகியுள்ளது.


அந்த வீடியோவில் ஒரு விலங்குகள் பராமரிப்பாளர் தன் தோலில் ஒரு மலைப் பாம்பை படரவிட்டு சுமக்கிறார். அந்த வீடியோவின் கீழ் பலரும் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.






இதை அழகென்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் பிடி இறுகினால் உயிர் போகும் என்று ஒரு பதிவர் எழுதியுள்ளார்.


இன்னொருவர் இது அபாய நூடுல் என்று குறிப்பிட்டுள்ளார்.


மற்றொரு நபர், நீங்கள் தூக்கியது எல்லாம் சரி. அப்படியே அதை குப்பைத் தொட்டியில் வீசி விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த வீடியோவுக்கு பாகுபலி 2.0 என்று பெயர் சூட்டலாம் என்று இன்னொரு பதிவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.


இவ்வாறாக பலரும் பலவிதமான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். எச்சரிக்கை பின்னூட்டங்கள் சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் மலைப் பாம்புகள் பிடியை இறுக்கிவிட்டால் அதனிடமிருந்து தப்பிப்பது அசாத்தியம். தன்னைவிட அளவில் பெரிதான இரையைக் கூட நொறுக்கிவிடும் தன்மை மலைப் பாம்புக்கு உண்டு. அதனால் அந்தப் பெண்ணை எச்சரிக்கையுடன் இருக்குமாறு நெட்டிசன்கள் பலரும் எச்சரித்துள்ளனர்.


மலைப்பாம்பு எப்படி தாக்கும்?


இங்குக் கண்டெடுக்கப்பட்ட மலைப்பாம்பு தென்கிழக்கு ஆசியப் பகுதியில் காணப்படும் வகையைச் சேர்ந்தது. இதன் நீளம் 32 அடி வரை இருக்கும். இது மிகவும் பலம் மிக்கது. பதுங்கியிருந்து தனது இரையைத் தாக்கும் இப்பாம்பு, இரையை சுற்றி முறுக்கி நசுக்கும்.


இதனால், சில நிமிடங்களில் இந்த பாம்பிடம் சிக்கிக்கொண்டவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு இறப்பார்கள்.


தனது இரை முழுவதையும் இந்த பாம்பு உண்ணும். பெரிய இரைகளைக் கூட முழுவதுமாக விழுங்கும் அளவுக்கு இதன் தாடை மிகவும் நெகிழ்வானது.