இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே பதவியேற்ற நிலையில், புதிதாக 4 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறை அமைச்சராக தினேஷ் குணவர்தன, நிதி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் துறை அமைச்சராக ஜீ.எல்.பெரிஸ், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர, நகர்புற வளத்தித்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு இடைக்கால அமைச்சர்களாக 4 பேர் நியனனம் செய்யபப்ட்ட நிலையில் அவர்களின் பின்னணி இதோ...


தினேஷ் குணவர்தன - பொதுப்பணித்துறை அமைச்சர் 


 



தினேஷ் குணவர்தன - பொதுப்பணித்துறை அமைச்சர


பௌத்த மதத்தை சேர்ந்த தினேஷ் குணவர்தன தொழிற்சங்கவாதியாக அறியப்படுகிறார். நெதர்லாந்து ஸ்கூல் ஆஃப் பிஸ்னஸில் வணிகவியல் டிப்ளமோ முடித்த இவர், ஒரோகான் பல்கலைக்கழகத்தில் பிபிஏ படித்து முடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது வியட்நாம் போர் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்.  மஹாஜன எக்சத் பெரமுண (Mahajana Eksath Peramuna) அமைப்பின் சார்பில் 1977, 1983, 1989, 1994, 2000, 2001, 2004, 2010, 2015, 2020 ஆகிய காலகட்டங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். நீண்டகால நாடாளுமன்ற அனுபவம் வாய்ந்த தினேஷ் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 


ஜீ.எல்.பெரிஸ் - நிதித்துறை  


 



ஜீ.எல்.பெரிஸ் - நிதித்துறை  


நிதி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜீ.எல்.பெரிஸின் முழுப்பெயர் காமினி லக்ஷ்மன் பெரிஸ். இலங்கையில் கல்வியாளராக அறியப்படும் இவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்தவர். ஏற்கெனவே நடந்த முந்தைய அரசாங்கங்களில் கல்வி அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.  1971ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் உள்ள நியூ காலேஜ்ஜில் முதல் முனைவர் பட்டத்தையும், 1974ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முனைவர் பட்டத்தையும் பயின்றார். கடந்த 2001-2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஐக்கிய தேசிய முன்னணி அமைந்த காலகட்டத்தில் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, விடுதலைப்புலிகள் உடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, தலைமை பேச்சுவார்த்தையாளராக பெரிஸ் நியமிக்கப்பட்டார். 


காஞ்சனா விஜேசேகரா - மின்சாரத்துறை மற்றும் எரிசக்தித்துறை


 



காஞ்சனா விஜேசேகரா - மின்சாரத்துறை மற்றும் எரிசக்தித்துறை


இலங்கை முன்னாள் அமைச்சரவை அமைச்சர் மஹிந்த விஜேசேகரவின் மகனான காஞ்சனா விஜேசேகரா, 2009, 2015 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள காஞ்சனா, 2010 முதல் 2014 வரை தெவிநுவர தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 


பிரசன்ன ரணதுங்க - நகர்புற வளர்ச்சி 


 




பிரசன்ன ரணதுங்க - நகர்புற வளர்ச்சி 




ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவைச் சேர்ந்த பிரசன்ன ரணதுங்க, இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் ஆவார். கடந்த 2015ஆம் ஆண்டு கம்ஹா மாவட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.  இலங்கை மேற்கு மாகாணத்தில் முதலமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் பிரசன்ன ரணதுங்கவிற்கு உண்டு.