இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் ஆளும் கட்சி எம்.பி. ஒருவர் போராட்டக்காரர்கள் சூழ்ந்ததால் தற்கொலை செய்து கொண்டார் என்று ஏற்கெனவே செய்தி வெளியான நிலையில், அவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


இலங்கையில் கடந்த திங்கள்கிழமை அமைதி வழியில் அரசுக்கு எதிராகப் போராடி வந்தவர்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பிரதமரின் ஆதரவாளர்களும் பல இடங்களில் தாக்கப்பட்டனர். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. 


இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி அலுவலகங்கள் சிலவும் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் நிமல் லான்சாவின் வீடும் தீவைத்து எரிக்கப்பட்டது. 


ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பொலநருவா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி. 57 வயதான அமரகீர்த்தி அதுகொரளவை வட மேற்கு நகரமான நிதம்புவாவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது, அதுகொரளாவின் வாகனத்தில் இருந்து போராட்டக்கார்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் அவரது வாகனத்தைத் தாக்கி கவிழ்த்ததாகவும் கூறப்படுகிறது.




போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பிக்க அதுகொரளவும் அவரது பாதுகாவலரும் அருகே உள்ள கட்டடத்தில் தஞ்சமடைந்தனர். அந்தக் கட்டடத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்தனர். இதனால், அதுகொரளவும் அவரது பாதுகாவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர் என முன்பு தகவல் வெளியானது.


இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி  கொலை செய்யப்பட்டார் என்று காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாக தனியார் செய்தித்தாள் நிறுவனம் தகவல் தெரிவித்தது.


அதில் அளித்த தகவலின் அடிப்படையில், எம்.பி. அதுகொரள தற்கொலை செய்து கொள்ளவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க அவர் முயற்சித்துள்ளார். ஆனால், அவரை விரட்டிப் பிடித்த போராட்டக்காரர்கள் அவரைக் கடுமையாக அடித்தும், உதைத்தும் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.


முன்னதாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர், பிரதமராக இருக்கும் ராஜபக்ச சகோதரர்கள் பதவி விலகக்கோரி மக்கள் வீதியில் இறங்கிபோராட்டம் நடத்துகின்றனர். தொடர் அழுத்தத்தின் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். அதுவரை போராட்டம் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றுவந்த நிலையில், பிரதமர் பதவி விலகலுக்கு பிறகு வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண