ஆட்டுக்குட்டி ! அட அதை யாருக்குதான் பிடிக்காதுங்க!  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஒரு பாலூட்டி இனம். ஆட்டுக்குட்டிகள் பல நாடுகளில் இறைச்சிக்காகவும் , செல்லப்பிராணிகளாகவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஆட்டுக்குட்டிகளில் பல வகைகள் இருக்கிறது. இது நாடுகளுக்கு நாடு மாறுபடும் . அவ்வப்போது ஆட்டுக்குட்டிகள் மனித முகத்துடன் பிறந்திருக்கிறது, நான்கு கால்களுக்கு பதில் ஆறு காதுகள் இருக்கிறது என இதுபோன்ற செய்திகளை நாம் சமூக ஊடகங்கள் மற்றும் செய்திகள் வாயிலாக பார்த்திருக்கிறோம்







வித்தியாசமாக பிறந்த ஆட்டுக்குட்டி :


இந்த நிலையில் பாகிஸ்தானில் 19 அங்குல ( 46 செமீ) நீளமான காதுகளுடன் பிறந்த புதிய ஆட்டுக்குட்டி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.  கடந்த ஜூன் மாதம்  5 ஆம் தேதி பிறந்த இந்த ஆட்டுக்குட்டிக்கு சிம்பா என பெயர் வைத்துள்ளார் அதன் உரிமையாளர். பொதுவாக நீண்ட காதுகள் கொண்ட ஆடுகளின் நுபியன் இனத்தைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இது வெப்பமான காலநிலையில் குளிர்ச்சியாக இருக்க உதவுகிறது. ஆனால் இந்த ஆடு அவ்வகையான ஆட்டுக்குட்டி இல்லை என்பதால் இது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது. 






கின்னஸ் சாதனை படைக்குமா ?


இந்த ஆட்டுக்குட்டியை தற்போது கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறாராம் அதன் உரிமையாளர் முஹம்மது ஹசன் நரேஜோ. பொதுவாக பாகிஸ்தாலில் கமோரி வகை ஆடுகள்தான் அதிகம் வளார்க்கப்படுகின்றனர். இவை முற்றிலுமாக இறைச்சி மற்றும் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகிறது. குட்டி பிறந்ததுமே அதன் காது தரையில் விழுவதை காற்றில் அசைவதையும் கண்டு தான் மிகுந்த ஆச்சர்யமடைந்ததாக கூறும் உரிமையாளர் முஹம்மது ஹசன் நரேஜோ , தனது ஆட்டுக்குட்டி நிச்சயம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இப்படியான ஆட்டுக்குட்டிகள் மரபணு மாற்றம் அல்லது மரபணு கோளாறு போன்றவற்றால் பிறந்திருக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள் . 


இந்த சிம்பா குட்டியை கொஞ்சுவதற்காக திரண்ட ஊர்மக்கள் கேட்பது, சாதனைப் பட்டியலில் இடம்பெறுமா என்பதைப் பற்றித்தான்..