இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை பரஸ்பரம் ஒப்புக்கொண்ட தேதியிலிருந்து அமலுக்கு கொண்டுவரப்படும். இதற்கான முடிவு ஆஸ்திரேலிய பாராளுமன்றம் இன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை அங்கீகரித்தது.
"இந்தியாவுடனான எங்கள் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது ட்வீட்டில் தெரிவித்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (AI-ECTA) செயல்படுத்தப்படுவதற்கு முன்பு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்தியாவில், அத்தகைய ஒப்பந்தங்கள் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படுகின்றன.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி. எங்கள் ஆழமான நட்பின் விளைவாக, இது எங்கள் வர்த்தக உறவுகளின் முழு திறனை செயல்படுத்தவும், பாரிய பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் வழிவகுக்கிறது” என பதிவிட்டிருந்தார்.
செவ்வாய்கிழமை நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய பியூஷ் கோயல், இப்போது ஆஸ்திரேலிய அரசாங்கம் தங்கள் நிர்வாகக் குழுவின் ஒப்புதலையும், இங்குள்ள மத்திய அமைச்சரவையிடமிருந்து அமைச்சகத்தின் ஒப்புதலையும் பெறும் என்ற கூறியிருந்தார். இந்த ஒப்பந்தம் நியாயமானது மற்றும் இந்தியாவுக்கு பல வகையில் நன்மை பயக்கும் என தெரிவித்தார். ஆஸ்திரேலிய சந்தையில் பூஜ்ஜிய வரியின் பயனை எஃகு தொழில்துறையினர் (steel industries) பயன்படுத்தி தங்கள் ஏற்றுமதியை அதிகரிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கடந்த வாரம், Joint Standing Committee on Treaties , இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தது. ஒப்புதலுக்குப் பிறகு, இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேதியை முடிவு செய்வார்கள் மற்றும் சுங்க அதிகாரிகளும் செயல்படுத்துவதற்கு ஒரு நாள் முன்னதாக அறிவிப்பை வெளியிடுவார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஜவுளி, லெதர், அறைக்களன்கள், நகைகள் மற்றும் இயந்திரங்கள் உட்பட இந்தியாவின் 6,000 துறைகளுக்கு ஆஸ்திரேலிய சந்தையில் வரியில்லா அணுகலை வழங்கும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியா முதல் நாளிலிருந்து சுமார் 96.4 சதவீத ஏற்றுமதிகளுக்கு (மதிப்பு அடிப்படையில்) இந்தியாவிற்கு பூஜ்ஜிய வரி அணுகலை வழங்குகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது 4-5 சதவீத சுங்க வரியை ஈர்க்கும் பல தயாரிப்புகளை இது உள்ளடக்கியது. ஜவுளி மற்றும் ஆடைகள், லெதர், காலணி, அறைக்களன்கள், விளையாட்டு பொருட்கள், நகைகள், இயந்திரங்கள், மின்சார பொருட்கள் மற்றும் இரயில்வே வேகன்கள் ஆகிய துறைகள் அபரிமிதமாக ஆதாயமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி 8.3 பில்லியன் டாலராகவும், 2021-22 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து இறக்குமதி 16.75 பில்லியன் டாலராகவும் இருந்தது. இருதரப்பு வர்த்தகத்தை தற்போது 27.5 பில்லியன் டாலரில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 45-50 பில்லியன் டாலராக உயர்த்த இந்த ஒப்பந்தம் உதவும் என்று பியூஷ் கோயல் முன்பு கூறியிருந்தார்.