ஆஸ்திரேலிய கடற்கரையில் சிக்கித்தவித்த 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களைக் கடல் உயிரியலாளர்கள் காப்பாற்றினர்.
கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்:
கடந்த வியாழக்கிழமை, ஆஸ்திரேலியா கடற்கரைக்கு கூட்டமாக நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கடற்கரை அருகே ஒதுங்கின. அதில் சுமார் 160 கடற்கரையில் காலை சிக்கித் தவித்தன. வனவிலங்கு அதிகாரிகள், கடல் விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் குழுவானது, சில திமிங்கலங்களை கடற்கரையிலிருந்து விலகி ஆழமான நீருக்குள் வழிநடத்த முயற்சித்தனர்.
இதையடுத்து 100 க்கும் மேற்பட்ட திமிலங்களை கடலின் ஆழத்திற்குச் சென்றனர். இதனால், 100க்கும் மேற்பட்ட திமிலங்கள் உயிர் தப்பின. இச்சம்பவம் குறித்து, மேற்கு ஆஸ்திரேலியாவின் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கையில், கடற்கரையில் இருந்த 26 திமிங்கலங்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியது.
2022 ஆம் ஆண்டு நியூசிலாந்து கடற்கரையில் சுமார் 500 திமிங்கலங்கள் இறந்ததாக கூறப்படுகிறது.
திமிங்கலங்கள் ஏன் கூட்டமாக கரைக்கு வருகின்றன என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. .