Shark : ஆஸ்திரேலியாவில் சுறா மீன் கடித்ததில் 16 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்திரேலியா பெர்த் நகரில் ஃப்ரீமண்டில் துறைமுகப் பகுதியில் ஸ்வான் என்ற ஆறு உள்ளது. பொழுதுபோக்கு இடமாக இருக்கும் இடத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வது வழக்கம்.  இந்த ஆற்றில் டால்பின்கள் ஏராளமாக இருக்கின்றன. அதனால் அதனை கண்டுகளிக்க ஏராளமான மக்கள் ஜெட் கைஸ் (jet skis) பயணம் செய்வார்கள்.


இந்நிலையில் நேற்று 16 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் ஆற்றில் ஜெட் கைஸில் பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரு இடத்தில் டால்பின்கள் கூட்டம் அலைமோதின. இதை பார்த்த அவர்கள் அனைவரும் உற்சாகமடைந்து ஆற்றில் குதிக்க நினைத்தனர். 


இதனை அடுத்து டால்பின்களை பார்த்து உற்சாகமடைந்த 16 வயது சிறுமி ஜெட் கைஸில் இருந்து ஆற்றுக்குள் குதித்தார். இந்த நேரத்தில்  சுறா மீன் ஒன்று 16 வயது சிறுமியை கடித்து குதறியது. இதனால் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அலறினர். உடனே 16 வயது சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 






இதுகுறித்து போலீசார் அதிகாரி கூறுகையில், டால்பின்களை பார்த்த உற்சாகத்தில்  அந்த சிறுமியானது தண்ணீரில் குதித்துள்ளார். சிறுமி தண்ணீரில் நீந்தியபோது அவரை சுறா மீன் தாக்கியது. சிறுமியை தாக்கிய சுறா எந்த வகையான இனத்தை சேர்ந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் ஸ்வால் ஆற்றுப் பகுதி முழுவதும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.


இதற்கு முன்னதாக இதே பகுதியில் கடந்த ஆண்டு 57 வயதுடைய நபர் ஒருவர் சுறா மீன் கடித்ததில் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக ஆய்வுகள் கூறியதாவது, உலகின் பவளப்பாறைகளுக்கு மத்தியில் வாழும் அரிய வகையான சுறாக்கள் கிட்டத்தட்டட மூன்றில் இரண்டு பங்கு அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளது. அதாவது 59 சதவீத சுறா மீன்கள் அபாயத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.




மேலும் படிக்க


China Spy Balloon Video: சீனா உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்.. கண்டனம் தெரிவித்த சீனா.. வைரலாகும் வீடியோ


NASA Webb Telescope: சுழல் விண்மீனின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா.. ஆய்வில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்..


Srilanka: இலங்கை 75-வது சுதந்திர தின விழா; கரிநாளாக அறிவித்து பேரணி நடத்திய தமிழர்கள்..! காரணம் என்ன?