இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்பட அந்நாட்டு அரசு எந்தவித முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.


ஜெனீவாவில் நேற்று தொடங்கிய ஐ.நா சபை கூட்டத்தில் இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே ( Indra Mani Pandey) உரையாற்றினார். அவர் பேசுகையில், "இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியானது அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தில்  கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளதை நிரூபித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்த நிலைப்பாடு கடந்த காலத்தை விட வலுவானது.





இருப்பினும்,  இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட இனப்பிரச்சினைக்காக அரசியல் தீர்வு காணும் விவகாரத்தில் இலங்கை அரசால் இதுவரை எந்தவித முயற்சியும் எடுக்கப்பட வில்லை. அதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் போன்ற அரசியல் தீர்வுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்தியா எதிர்பார்க்கிறது.


இலங்கையின் அரசியலமைப்பின் 13-வது திருத்த சட்டத்தை அமல்படுத்துவது, தமிழ் சிறுபான்மையினருக்கு அதிக சுயாட்சி வழங்குதல், மாகாண சபைக்களுக்கான தேர்தல் உள்ளிட்ட் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென இந்தியா இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறது. 








இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர் வேண்டும் என்பது குறித்த இந்தியாவின் நீடித்த கவனம் மற்றும் பார்வை என்பது அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்கு  நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்வை  உறுதி செய்யும் வகையிலும், ஐக்கிய இலங்கை கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்டவைகளில் உள்ளது என்று தெரிவித்தார். 


அந்நாட்டில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் உள்ள  மாகாண சபைகளுக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதன் மூலம் நாட்டின் குடிமக்களின் வளமான எதிர்காலத்திற்கு உதவும்.  எனவே, இந்த விஷயத்தில் நம்பகரமான   நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொள்வதாகவும் அவர் பேசினார். 




மேலும் வாசிக்க..


Happy Birthday Karthik : தமிழ் சினிமாவில் யுனிக் ஐகான் - ‘நவரச நாயகன்’ கார்த்திக் பர்த்டே ஸ்பெஷல்!


தொடரும் சோதனை... மாறி மாறி படையெடுக்கும் முன்னாள் அமைச்சர்கள்... விடாப்படியாக நிற்கும் போலீஸ்!