Mecca Heat Wave: வெப்ப அலையின் தாக்கம் - மெக்காவில் 19 ஹஜ் பயணிகள் உயிரிழந்த சோகம் - 17 பேர் காணவில்லை

Mecca Heat Wave: சவுதி அரேபியாவின் மெக்காவில் வெப்பத்தின் தாக்கத்தால் 19 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Mecca Heat Wave: சவுதி அரேபியாவின் மெக்காவில் ஹஜ் பயணிகள் 17 பேர் காணாமல போனதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மெக்காவில் 19 பேர் உயிரிழப்பு:

சவுதி அரேபியாவின் மெக்காவிற்கு வந்த ஹஜ் பயணிகளில் 19 பேர், உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் தாக்கத்தால் இந்த உயிரிழப்புகள் நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஜோர்டானைச் சேர்ந்த 14 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் காணவில்லை. அதிகப்படியான வெப்ப அலையின் காரணமாக வெயிலின் தாக்கத்தால் மரணம் நிகழ்ந்துள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய ரெட் கிரசண்ட் தலைவர் பிர்ஹோசைன் கூலிவாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது மெக்கா மற்றும் மதீனாவில் இதுவரை ஐந்து ஈரானிய பயணிகள் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

வெப்ப அலை - பக்தர்களுக்கு எச்சரிக்கை:

உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களின் ஒன்றான ஹஜ், இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மெக்காவில் உள்ள ஹஜ்ஜிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் பேர், புனித யாத்திரைக்காக மெக்காவிற்கு வருவார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அங்கு தற்போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியுள்ளது. இதனால், புனித பயணம் மேற்கொள்பவர்கள், அதிக வெப்ப சூழலை எதிர்கொள்ளும் வகையில் நீர்ச்சத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

மெக்காவில் பல சடங்குகள் திறந்தவெளி மற்றும் கால்நடையாக செய்யப்படுகின்றன. இது பக்தர்களுக்கு குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு கடும் சவால்களை உருவாக்குகின்றன. இறந்தவர்கள் குறித்து சவுதி அரேபியா எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் காலநிலை கட்டுப்பாட்டுப் பகுதிகள் உட்பட வெப்பத் தணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அங்கு, பக்தர்களுக்கு தண்ணீர் விநியோகிப்பது மட்டுமின்றி சூரிய ஒளியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து யாத்ரீகர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

அதிகரிக்கும் வெப்பநிலை:

கடந்த ஆண்டு ஹஜ்ஜின் போது குறைந்தது 240 பேர் பலியாகினர். அதில் பெரும்பால்னோர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.  பல நாடுகளால் இறப்பு செய்தி அறிவிக்கப்பட்டாலும், அதற்கான சரியான காரணங்கள் விளக்கப்படவில்லை. கடந்த ஆண்டு 10,000 க்கும் மேற்பட்ட வெப்பம் தொடர்பான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 10 சதவீதம் ஹீட் ஸ்ட்ரோக்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தசாப்தத்திலும் சவுதி அரேபியாவின் வெப்பநிலை 0.4 C அதிகரித்து வருவதாகவும், மோசமான வெப்பநிலையை கையாள அங்கு மேற்கொண்டுள்ள தணிப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும் சில ஆய்வுகள் எச்சரிக்கின்றன

Continues below advertisement
Sponsored Links by Taboola