ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், பதற்ற நிலை நீடிப்பதால் அங்கிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
கான்பெர்ரா விமான நிலையத்தில் (Canberra Airport) செக்-இன் பகுதியில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு பலரும் அச்சத்துடன் அலற தொடங்கினர். இதையெடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த தாக்குதலில் அங்கிருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் பதற்றம் காரணமாக அங்கிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சி.சி.டி,வி. வீடியோ தகவலின் அடிப்படையில், இந்த தாக்குதலுக்கு ஒருவர் மட்டும்தான் பொறுப்பு என்றும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்