அமெரிக்க பில்லினர் ஜேரட் ஐசக்மேன் அறிவித்த விண்வெளிப் பயணத்தில் கேரளாவைச் சேர்ந்த இன்ஜினியர் அன்னா மேனன் இடம்பெற்றுள்ளார்.


இந்த ஸ்பேஸ் மிஷன் தான் உலகின் முதல் தனியார் ஸ்பேஷ் மிஷன் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா கடந்த ஆண்டு விண்வெளி திட்டங்களுக்குப் புதிதாக 10 விண்வெளி வீரர்களை அறிவித்தது. அதில், அனில் மேனன் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும்  தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த சங்கரன் மேனன் என்பவருக்கும், உக்ரைனைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பிறந்தவர் அனில் மேனன். இந்த அனில் மேனனின் மனைவி தான் இப்போது அமெரிக்க பில்லினர் அறிவித்த ஸ்பேஸ் எக்ஸ் மிஷனில் இடம்பெற்றிருக்கும் அன்னா மேனன்.


இவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் லீட் ஸ்பேஸ் ஆப்பரேஷன்ஸ் இன்ஜினியராக இருக்கிறார். இவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் மிஷன்களின் கண்காணிப்பாளராக, க்ரூ கம்யூனிக்கேட்டராக இருக்கிறார். 


இந்நிலையில் தான் ஷிஃப்ட் 4 என்ற பேமென்ட் ப்ராசஸிங் நிறுவனத்தின் நிறுவனர் ஜேரட் ஐசக்மேன் போலாரிஸ் திட்டத்தை அறிவித்தார். இது மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண் ஓட தயாரிப்புக்கு நிதி திரட்டும் திட்டம். இந்தத் திட்டத்தில் மூன்று ஸ்பேஸ் மிஷன் செயல்படுத்தப்படும். இது புதிய தொழில்நுட்பங்களுடன் கூடியதாக, விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாக இருக்கும். போலாரிஸ் டான் என்பது தான் இத்திட்டத்தின் முழுப் பெயர். 2022ஆம் ஆண்டின் கடைசியில் ப்ளோரிடாவில் உள்ள நாசா கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து இந்த ஸ்பேஷ் மிஷன் செயல்படுத்தப்படும்.


தி போலாரிஸ் டான் மிஷனுக்கு நிறைய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. 


ஐசக்மேனின் இந்தக் குழுவில் ஸ்காட் பொடீட், ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர் சாரா கில்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அன்னா மேனன் Demo-2, Crew-1, CRS-22, CRS-23 போன்ற மிஷன்களில் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னதாக அவர் நாசாவில் பயோமெடிக்கல் ஃப்ளைட் கன்ட்ரோலராக 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதற்கும் முன்னதாக அமெரிக்க விமானப் படையில் லெஃப்டினன்ட் கர்னலாகப் பணியாற்றியுள்ளார்.


ஸ்பேஷ் மிஷன் தான் அவரின் வாழ்க்கையின் மூச்சு. அந்த அளவுக்கு அவருக்கு அதில் ஈடுபாடு. இதுதவிர ஹைக்கிங், சிறிய விமானங்களை ஓட்டுவது, சால்சா நடனமாடுவது ஆகியன அவருக்குப் பிடித்தமானவை. அன்னா மேனன் குடும்பத்தின் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டவர். அனிலுக்கும் அன்னாவுக்கும் ஜேம்ஸ் என்ற மகனும், கிரேஸ் என்ற மகளும் உள்ளனர்.


இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த அன்னா மேனன், அமெரிக்க விமானப் படை, நாசா, ஸ்பேஸ் எக்ஸ், விண்வெளி பயணத் திட்டக் குழுவின் உறுப்பினர் என பல்வேறு சாதனைகளை செய்து வருவதை பாராட்டுகளைக் குவித்து வருகிறது.