Lassa Fever: கொரோனா வைரஸ் பரவலால் உலகெங்கிலும் அசாதாரண சூழல் நிலவி வருவதால், புதிதாக ஏற்பாடும் காய்ச்சல் தொற்றுகளை சமாளிக்க உலக நாடுகள் தயாராகி வருகிறது. இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் பரவி வரும் ‘லஸ்ஸா’ காய்ச்சால் 3 பேர் உயிரிழந்திருப்பது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 


1969-ம் ஆண்டு, தென்னாப்ரிககவைச் சேர்ந்த நைஜீரியா நாட்டில் உள்ள லஸ்ஸா எனும் இடத்தில் முதன் முதலில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் எலிகளின் சிறுநீர், மலம் மூலமாக பரவக்கூடியது என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. 


பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல்:


அதனை அடுத்து, 1980களில் முதல் முறையாக லஸ்ஸா காய்ச்சல் பாதிப்பு பிரிட்டனில் கண்டறியப்பட்டது. கடைசியாக 2019-ம் ஆண்டு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரிட்டனை தாக்கி இருக்கும் லஸ்ஸா காய்ச்சலுக்கு, இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆப்ரிக்கா பகுதிக்கு பயணம் சென்று வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தகவல்படி, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 1 லட்சம் முதல் 3 லட்சம் பேருக்கு லஸ்ஸா காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதில், 3000 பேர் வரை உயிரிழப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்:


காய்ச்சல், உடல் சோர்வுடன் தொடங்கும் லஸ்ஸா காய்ச்சலுக்கான அறிகுறிகள் படிபடியாக பாதிப்பை அதிகரிக்கும். தலைவலி, தொண்டை வலி, தசை வலி, மார்பு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல் மற்றும் வயிற்று வலி ஆகியவை அறிகுறிகளாக தென்படலாம். பாதிப்பு அதிகமாகும் போது, வாய், மூக்கு, பிறப்புறுப்பு ஆகியவற்றில் இருந்து ரத்தம் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இதனால், இந்த அறிகுறிகள் தீவிரமாகும் முன் மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுருத்தப்படுகிறது. 


நோய்த் தொற்றின் பாதிப்பை முன்னரே கண்டறிவது கடினம். எபோலா, மலேரியா, டைஃபாய்டு, மஞ்சள் காமலை போன்ற மற்ற காய்ச்சலோடு வித்தியாசப்படுத்தி கண்டறிவது சவாலான விஷயம் என மருத்துவ துறை தெரிவித்துள்ளது. எனவே, எலி நடமாட்டம் இல்லாத அளவு வீட்டை சுத்தமாக வைத்திருப்பது அவசியம் எனவும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண