உலகின் மிகப்பெரும் பணக்காரர்,டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியிருந்தார். உலக அளவில் இது பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கு, டிவிட்டரி நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி (Jack Dorsey) மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார் என்று அமெரிக்க பிரபல இதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளது.


டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி, எலான் மஸ்கிடம், ஒரு சமூக ஊடகம் என்பது தனிநபரின் கீழ் இயங்கும் நிறுவனமாக இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் டிவிட்டரின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதற்கு பின் அவர் பில்லியனர்ஸ்  நண்பர்களின் அறிவுரையும், பரிந்துரையும் இருக்கிறது என்கிறது வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.


இந்த பில்லியனர்ஸ் குழுவில் பேபால் நிறுவனர்கள், நிர்வாக அதிகாரிகள் என பலர் இருந்திருக்கிறார்கள்.




பிரபல பில்லியனர்ஸ் பீட்டர் தீல் (Peter Thiel), ரோல்ஃப் போதா (Roelof Botha), மேக்ஸ் லேவ்சின்( Max Levchin)  ஆகியவர்கள் எலான் மஸ்கின் முடிவுக்கு பின் இருந்திருக்கிறார்கள்.


எலான் மஸ்க் மற்றும் டோர்சி இருவருக்கும் இடையே நீண்ட நாட்களுக்கு முன்பிலிருந்து நல்ல நட்புறவு இருந்துவருகிறது. மேலும், டோர்சி, எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதை தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியிருந்தார். அவர், டிவிட்டருக்கு எலான் மஸ்க்தான் ஒரே தீர்வு என்று குறிப்பிட்டிருந்தார்.






எலோன் மஸ்க்  டிவிட்டருக்கு பொருத்தமான நபர் என்றுர ஜாக் டோர்சி கூறியிருக்கிறார். அவரது ஐடியா மற்றும் சேவை இரண்டு மிக முக்கியமான காரணிகள். எலானுக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன் என்றும் டோர்சி ஏற்கனவே கூறியிருந்தார். 


எலான் மஸ்க் டிவிட்டரில் பல புதிய அப்டேட்களையும், சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலான் மஸ்கின் கீழ் டிவிட்டரில் என்னவெல்லாம் புதிய வரவாக இருக்கும் என்பது இனிமேல் தெரியவரும்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண