சமூக வலைதளமான டிவிட்டரை 44 மில்லியன் டாலருக்கு வாங்குவதாக இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தை மீறியதாக எலான் மஸ்க் மீது வழக்கு போட டிவிட்டர் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதனை சுட்டிக்காட்டி தொழிலதிபர் ஆனந்த் மகிந்திர ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், "நேர விரயம். பொருளும், சக்தியும் விரயம். ட்விட்டர் ஒரு இன்றியமையாத சமூக வலைதளம். செய்தியாலும், உணர்வுகளாலும் மக்களை பிணைத்து வைத்துள்ளது. அதை எப்படி பட்டியலிடப்பட்ட, லாபத்திற்காக இயங்கும் ஒரு அரை சமூக நிறுவனமாக நடத்த முடியுமா? அதனை வலுவான சாசனத்துடன், அறங்காவலர்களைப் போல பொறுப்புடன் செயல்படும் இயக்குநர்களைக் கொண்ட குழுவால் நிர்வகிக்க முடியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.
மொத்தத்தில் ஆனந்த் மகிந்திரா சொல்வதை சந்தானம் காமெடியில் வரும் இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என்பதை ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம்.
அறிவிப்பும், பின்வாங்கலும்:
உலகின் முன்னனி பணக்காரராரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுலவருமான எலான் மாஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரை வாங்குவதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக எலான் மஸ்க்கும் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார்.
இந்த தகவலை எலான் மஸ்க் தெரிவித்ததும், உலகம் முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, 44 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தற்போது ட்விட்டர் கணக்குகள் மற்றும் அதன் ஷேர்கள் எலான் மஸ்க்கிற்கு மாற்றப்பட்டு வருகிற பணிகள் நடந்து வருகிறது. இச்சூழலில், ட்விட்டர் நிர்வாகத்தின் மீது கோபம் கொண்ட எலான் மஸ்க், ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தினை ரத்து செய்வதாக அறிவித்தார்.
ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் மற்றும் தொடர்ந்து செயல்படாமல் இருக்கக்கூடிய கணக்குகள் பற்றிய விபரங்களை, ஒப்படைக்கும் படி மஸ்க் ட்விட்டர் நிர்வாகத்திடம் கேட்டிருந்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகம் இது குறித்து எந்த விதமான தகவலையும் வழங்கவில்லை. மேலும் ட்விட்டர் தெரிவித்திருந்ததை விட 4 மடங்கு அதிகமான போலி கணக்குகள் உள்ளதாகவும், இதனால் லாபமற்ற ட்விட்டரை வாங்கி பயனற்றது என எலான் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.