பர்மிங்காமில் இருந்து லண்டனுக்கு ரயிலில் பயணித்த பெண்ணை பாலியல் தொல்லை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 39 வயதான இந்திய வம்சாவளி நபருக்கு 16 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழு ஆண்டுகள் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் அவரது பெயர் இடம்பெறும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 


இங்கிலாந்து நாட்டின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் முகன் சிங் (வயது 39). இந்திய வம்சாவளியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு பர்மிங்காமில் இருந்து மேரிலெபோனுக்கு சென்ற ரயிலில் ஏறி பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பர்மிங்காம் மூர் ஸ்ட்ரீட் ரயில் நிலையத்தில் 20 வயது இளம்பெண் ரயிலில் ஏறியுள்ளார். அந்த இளம்பெண் முகன் சிங் அருகே அமர்ந்துள்ளார். முதலில் எதிர் இருக்கையில் இருந்து அந்த பெண்ணை உற்று நோக்கிய முகன் சிங், சிறிது நேரத்தில் அந்த பெண் அருகில் அமர்ந்துள்ளார். அப்போது தகாத முறையில் நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. 


முகன் சிங் ரயிலில் இருந்து கிழே இறங்குவதற்கு முன் அந்த பெண் முகன் சிங்கை விடீயோ எடுத்துள்ளார். பின் அங்கு இருக்கும் ரயில்வே காவல் துறையினரிடன் புகார் அளித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் முகன் சிங்கை ரயில் நிலையத்திலேயே கைது செய்துள்ளனர். முகன் சிங்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த இளம் பெண்ணும் அதற்கு விருப்பப்பட்டதால் தான் அருகில் அமர்ந்தேன் என கூறியுள்ளார்.  இது தொடர்பான வழக்கு விசாரணை வார்விக் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் முகன் சிங் மீதான குற்றம் உண்மையென உறுதியான நிலையில் அவருக்கு 16 வாரம் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. மேலும் ஏழு ஆண்டுகள் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் அவரது பெயர் இடம்பெறும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  


இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான டிடெக்டிவ் கான்ஸ்டபிள் (டிசி) ஹாரிஸ் கூறுகையில், "இது தனியாக பயணம் செய்து கொண்டிருந்த இளம் பெண் மீது நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல் மற்றும் தனிநபரை குறிவைத்து தாக்குதல்” என கூறியுள்ளார்.  மேலும் காவல் துறை விசாரணையின் போது, முகன் சிங், அந்த பெண் அதனை விரும்பியதால் தான் இப்படி செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.  இது ஏற்ற்குக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என்றும், இப்படி 16 வாரம் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர் செய்த குற்றங்களை நினைத்து வருந்த போதிய அவகாசம் இருக்கும் என்றும் டிடெக்டிவ் கான்ஸ்டபிள் (டிசி) ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.