Amoeba :  மூளையை அமீபா தாக்கியதில் அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் பீட்டர் ஸ்டீவ் (26). இவர் ஐடி கம்பெணியில்  வேலை செய்து வந்தார். அப்போது தெருக்குழாயில் முகத்தை கழுவியுள்ளார். பின்னர் இரவு உறங்கிவிட்டு காலை எழுந்தரிக்க முடியாமல் தவித்துள்ளார். அவருக்கு பயங்கர காய்ச்சல் மற்றும் கடுமையான தலைவலியும் இருந்துள்ளது.  இதனை அடுத்து பீட்டர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்கள் சாதாராண காய்ச்சல் என்று நினைத்து மாத்திரைகள் மட்டும் கொடுத்துள்ளனர். அப்போதும் பீட்டருக்கு காய்ச்சல் சரியாகாமல் இருந்தது. நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகமாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 


இதனை அடுத்து, அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரது மூளையை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது நுண்ணுயிர்கள் தின்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பகுதியைச் சேர்ந்த ஒருவர் நெக்லேரியா ஃபோலேரி (naegleria fowleri) என்று  அழைக்கப்படும் மூளையை உண்ணும் அமீபா தாக்கியதில் உயிரிழந்தததாக தகவல் வெளியாகி உள்ளது.


இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு தென்கொரியாவைச் சேர்ந்த நபர் நெக்லேரியா ஃபோலேரி (naegleria fowleri) அமீபா தாக்கியதில் உயிரிழந்தார் என்பது தெரிந்தது. மேலும் இந்த நெக்லேரியா ஃபோலேரி (naegleria fowleri) அமீபா மூளையின் நரம்பு மண்டலத்தை பாதிப்படைய செய்கிறது. இத்துடன் இல்லாமல் மூளை திசுகளை சேதப்படுத்துகிறது. சூடான் நீரில் காணப்படும் இந்த வகை அமீபாக்கள் மூக்கின் வழியாக சென்று மூளையை பாதிப்பதால் இனை மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படுகிறது.


இந்த அமீபா ஒருவரின் மூளைக்கு சென்றுவிட்டால்  அவரை காப்பாற்றுவது கடினமாக ஒன்று என மருத்துவர்கள் கூறினர். ஆனால் இந்த அமீபா வாய் வழியாக சென்று பாதிப்பு குறைவு. ஆனால் சிலர் முகத்தை கழுவும்போது தண்ணீரை மூக்கால் உறிஞ்சி விடுவார்கள். இதுபேன்ற சமயங்களில் தான் இந்த அமீபாக்கள் மூக்கினுள் சென்றுவிடுகின்றதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.  அதனால் முகத்தை கழுவும்போது யாரும் டேப் தண்ணீரில் கழுவ வேண்டாம் எனவும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


இதற்கு எந்த மருந்தும் தற்போது வரை கண்டறியப்படவில்லை. தற்போது ஆம்போடெரிசின் பி (amphotericin B), அசித்ரோமைசின்(azithromycin), ஃப்ளூகோனசோல் (fluconazole), ரிஃபாம்பின் ( rifampin), மில்டெஃபோசின்(miltefosine) மற்றும் டெக்ஸாமெதாசோன் (dexamethasone) உள்ளிட்ட மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் மூக்கு வழியாக இந்த அமீபா சென்றால்  இந்த மருந்துகள் முலம் குணப்படுத்துவது கடினம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.




மேலும் படிக்க


'ஆபரேஷன் தோஸ்த்' உதவியை மறந்ததா துருக்கி? ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை OIC க்கு கொண்டு சென்றதால் அதிர்ச்சி!