பாகிஸ்தானில் அமெரிக்கப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை… வாலிபர்கள் தப்பி ஓட்டம்!

அவர் தங்கி இருந்த அந்த ஓட்டல் அறையிலேயே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அந்த 2 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர்.

Continues below advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சென்ற இடத்தில் அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது ஒரு கும்பல்.

Continues below advertisement

பேஸ்புக் பக்கம் நடத்தும் பெண்

பேஸ்புக் பக்கம் ஒன்றை நடத்தி வரும் அந்த பெண் பல சுற்றுலா தலங்களுக்கு சென்று அதனை அவரது பக்கத்தில் பதிவிடுவார். உலகெங்கும் சுற்றி அங்குள்ள புகழ்வாய்ந்த இடங்களை பதிவு செய்து பதிவிடும் வழக்கம் கொண்ட அவர் ஒவ்வொரு நாடாக சென்று தங்கி விடியோ பதிவிடுகிறார். அதற்காக அவர் கடந்த 7 மாதங்களாக பாகிஸ்தானில் தங்கி இருந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றுள்ளார்

அங்கு தங்கி இருந்த அவரை அவருடைய பேஸ்புக் நண்பரான முஸ்மல் சிப்ரா என்பவர் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அவரது வீடு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மலைப்ரதேசமான போர்ட் மண்ரோ என்ற இடத்தில் இருந்துள்ளது. அவரின் அழைப்பை ஏற்று கராச்சியில் இருந்து போர்ட் மன்ரோவுக்கு அந்த அமெரிக்க பெண் சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: கல்யாணத்துக்கு பிறகும் ஜீன்ஸ் பேன்டா? மனைவியிடம் சண்டையிட்ட கணவன் மர்ம மரணம்!

கூட்டு பாலியல் வன்கொடுமை

அங்கு சென்ற அவர் ஒரு ஓட்டலில் தங்கியுள்ளார். அங்கு அந்தப் பெண்ணை இரண்டு மர்மநபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த ஓட்டல் அறையிலேயே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அந்த 2 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர்.

புகாரளித்த பெண்

சம்பவம் நடந்த பிறகு உடனடியாக அந்த அமெரிக்கப் பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், ஓட்டலில் தங்கியிருந்த போது 2 பேர் என்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 'என்னை அச்சுறுத்துவதற்காக அதை வீடியோவும் எடுத்தனர்' என்று கூறி உள்ளார்.

நீதி வழங்கப்படும்

பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்ததும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி ஹம்சா ஷெஹ்பாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "குற்றவாளிகளுக்கு சட்டத்தின்படி முன் மாதிரியான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கப்படும்" என்று கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement