டி மார்ட்டின் சூப்பர் மார்க்கெட்டுகளின் நிறுவனர் மற்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ-வும் ஆன ராதாகிருஷ்ணன் தமனி விலை உயர்ந்த வீட்டை வாங்கியுள்ளார்.


இந்தியாவின் காஸ்ட்லியான வீடு:


இந்திய தொழிலதிபர்களில் ஒருவர் ராதாகிருஷ்ணன் தமனி. ப்ளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸின் வரிசைப்படி 19.7 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் உலகின் 72வது பணக்காரராக திகழ்கிறார். மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் 1001 கோடி ரூபாய்க்கு மிகவும் விலை உயர்ந்த வீட்டை கடந்த ஆண்டு வாங்கியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.


90 ஆண்டுகள் பழமையான அந்த வீடானது 5,752 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த இடமானது சவுரப் மேத்தா, வர்ஷா மேத்தா மற்றும் ஜெயேஷ் ஷா ஆகியோரிடம் இருந்தது. இவர்கள் ப்ரேம்சந்த் ராய்சந்த் & சன்ஸ் எல்எல்சி மற்றும் பீனிக்ஸ் ஃபேமிலி ட்ரஸ்ட்டில் பங்குதாரராகவும், அறங்காவலர்களாகவும் இருந்துவருகின்றனர். இவர்களிடமிருந்து தான் இந்த இடத்தை வாங்கியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.




66,811 சதுர அடியில் அப்பார்ட்மெண்ட்:


ராதாகிருஷ்ணனுக்கு அடுத்து, கே ரஹேஜா கார்ப் ப்ரொமோட்டர்ஸின் ரவி மற்றும் நீல் ரஹேஜா ஆகியோர் இணைந்து 427 கோடி ரூபாய்க்கு, வோர்லி பகுதியில் 66,811 சதுர அடியிலான 3 சொகுசு அப்பார்ட்மெண்ட்டை விலைக்கு வாங்கியுள்ளனர். ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸைச் சேர்ந்த கன்ஷ்யாம்பா தோலகியா மும்பை வொர்லி பகுதியில் 185 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியுள்ளார்.


ஆகாஷ் கல்வி சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான ஜேசி சவுத்ரி டெல்லியில் 150 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியுள்ளார். கடந்த ஆண்டில் விற்பனையான 5வது மிக விலை உயர்ந்த வீடாகும். இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான க்ரிஷ் கோபாலகிருஷ்ணன் 76 கோடி ரூபாய்க்கு பெங்களூருவில் வீடு வாங்கியுள்ளார். இந்த தகவல்களை ஸாப்கீ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.


மிகவும் விலை உயர்ந்த வீடுகள் எல்லாம் கடந்த 2021ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டில் சில வீடுகளே விற்பனையாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் பெரும்பாலும் தொழிலதிபர்களாகவே உள்ளனர். இந்த பட்டியலில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த எழுத்தாளர் சேத்தன் பகத்தும் இடம் பெற்றிருக்கிறார். கடந்த மாதம் டெல்லியில் 11.6 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கினார். பாம்பே ஹாஸ்பிட்டல்ஸ்ன் டாக்டர் அமிதா நினி மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் 55 கோடி ரூபாய்க்கு வீடுவாங்கியுள்ளார்.




ரூ.98 கோடிக்கு வீடு:


டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மனான சந்திரசேகரன் நடராஜன் மலபார் ஹில் பகுதியில் 98 கோடி ரூபாய்க்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீடு வாங்கியுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீட்டெய்ல்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான மனோஜ் மோடி மற்றும் அவரது மனைவி ஸ்மிதா மனோஜ் மோடி இணைந்து 192 கோடி ரூபாய்க்கு மலபாஅர் ஹில்ஸ் பகுதியில் சொத்துகளை வாங்கியுள்ளனர். ஸ்மிதா மனோஜ் மோடி 54.5 கோடி ரூபாய்க்கும், மனோஜ் மோடி 48.75 கோடி ரூபாய்க்கும் சொத்துகளை வாங்கியுள்ளனர். அதே போல ஸ்மிதா மோடியும் அவரது மகள் பக்தி மோடியும் இணைந்து 89 கோடி ரூபாய்க்கு இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் சொத்துகள் வாங்கியுள்ளனர்.