செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், எல்லாமே விடியோ எடுக்கப்படுகிறது. புகைப்படங்கள் எல்லோராலும் எடுக்க முடிகிறது, மக்கள் செல்பி எடுக்கிறார்கள். மக்களிடையே செல்பி மோகம் அதிகரித்து விட்டது. எங்கு சென்றாலும், யாரைப் பார்த்தாலும் செல்பி எடுக்கிறார்கள். அதற்கு ஒரு வரையறை வேண்டும், ஏனெனில் ஏற்கனவே ரயில் முன் செல்பி எடுத்து இறந்த ஒரு சம்பவம் நாம் கண்டிருக்கிறோம். அது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. தற்போது இத்தாலியில் இந்த சம்பவம் நிகழ்ந்தேறி உள்ளது.
வெசுவியஸ் மலையில் செல்பி
காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, 23 வயதான சுற்றுலாப் பயணி ஒருவர் தனது குடும்பத்துடன் இத்தாலிக்கு பயணம் செய்துள்ளார். நேபிள்ஸ் நகரின் பிரபலமான வெசுவியஸ் எரிமலையின் உச்சியை அடைய அவர் தடை செய்யப்பட்ட பாதையில் சென்றுள்ளார். 4203 அடி உயர எரிமலையின் உச்சியில் நின்று செல்பிஎடுக்க முயன்றுள்ளார். அங்கு சென்று செல்பி எடுக்க முயற்சிக்கையில், அவரது மொபைல் போன் பள்ளத்தில் விழுந்துள்ளது. அப்போது அவர் போனை எடுக்க முயன்றபோது, தவறி பள்ளத்தில் விழுந்துள்ளார்.
உயிருடன் மீட்பு
விழுந்த சுற்றுலாப் பயணியை காப்பாற்ற, அங்குள்ள டூரிஸ்ட் கைடுகள் கீழே குதித்துள்ளனர். மேலும் போலீசார் கூட ஹெலிகாப்டருடன் சென்றனர். 15 மீட்டர் கயிறு கட்டி அவரை தூக்கி உள்ளனர். கயிற்றின் மூலம் இழுக்கப்பட்டதால், உடலில் சிறு உராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒருவழியாக சிறிய காயங்களுடன் அவர் மீட்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ஸு தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பாதை
அந்த சுற்றுலா பயணி மற்றும் அவரது மூன்று உறவினர்கள் தடை செய்யப்பட்ட பாதையை பயன்படுத்தியதற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்த 4 பெரும் சரியான டிக்கெட் எடுக்காமல் எரிமலைக்குச் செல்வதற்கு தடைசெய்யப்பட்ட பாதையில் சென்றுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்