அமெரிக்கா பாப் இசை மற்றும் ரப் இசையில் கலக்கி வரும் நட்சத்திரங்களில் ஒருவர் லில் உசில் வெர்ட். இவர் அமெரிக்கா பாப் இசை வட்டாரங்களில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இவர் மற்ற பாப் இசைக் கலைஞர்களை போல் தனக்கு என்று ஒரு அடையாளமாக ஒரு விஷயத்தை செய்தார். மற்ற கலைஞர் டாட்டூ போட்டு கொள்வதை பார்த்து தான் டாட்டூ போடாமல் வித்தியாசமாக ஒன்றை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதன்படி தன்னுடைய நெத்தியில் ஒரு பிங்க் நிற வைர கல் பதிக்க வேண்டும் என்று எண்ணினார். 


இதுகுறித்து ஏற்கெனவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "நான் இயற்கையாக உள்ள பிங்க் நிற வைர கல் வாங்க நீண்ட நாட்களாக பணம் கொடுத்து வருகிறேன். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முறையாக அந்த வைரத்தை பார்த்தேன். அப்போது முதல் அந்த கல் வாங்க நான் பணம் செலுத்தி வருகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார். அந்த வைரம் சுமார் 24 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்திய மதிப்பில் அந்த வைரத்தின் மதிப்பு சுமார் 175 கோடி ரூபாய் ஆகும். இந்த வைரத்தை கடந்த பிப்ரவரி மாதம் அவர் தன்னுடைய நெத்தியில் அறுவை சிகிச்சை மூலம் இணைத்து வைத்திருந்தார். 


 






இந்நிலையில் கடந்த மாதம் இவருடைய நேத்தியில் இருந்த வைரத்தை காணவில்லை. இந்தச் சூழலில் அவர் தன்னுடைய வைரத்தை எடுத்துவிட்டார் என்று சில செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக இந்த விவகாரம் தொடர்பான உண்மை  வெளியானது. அதாவது கடந்த மாதம் அமெரிக்காவின் ரோலிங் லோட் பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் லில் வெர்ட் பங்கேற்றுள்ளார். அப்போது இசை நிகழ்ச்சியின் போது அவர் அங்கு குவிந்த ரசிகர்களுக்கு மத்தியில் இறங்கி பாடியுள்ளார். 


 






அந்த சமயத்தில் ரசிகர்கள் இவருடைய நெத்தியில் இருந்த வைரத்தை வெளியே எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் அந்த வைரல் கல் தற்போது அவருடம் தான் உள்ளதாக தெரிகிறது. இதனால் அவருடைய வைரம் எங்கே என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அமெரிக்க பாப் பாடகர்கள் சிலர் இந்த மாதிரியான விஷயங்களை செய்து எப்போதும் பிரபலம் அடைவது வழக்கமான ஒன்று. 


மேலும் படிக்க:மரணத்தை தள்ளி வைத்து இளமையுடன் வாழ ஆராய்ச்சி... முதலீடு செய்த அமேசான் நிறுவனர்!