America Shooting: அமெரிக்காவில் நேற்று நடந்த துப்பாக்கி சுட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வெளிநாடுகளில், இந்தியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அங்கும் இங்குமாய் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, இன வெறி தாக்குதல் நடந்து வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. சமீபத்தில், கூட, ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது காலிஸ்தானி ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.


அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சி:


இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு கடையில் நேற்று 20 வயதான நபர் கையில் துப்பாக்கியை  வைத்துக் கொண்டு கடைக்குள் நுழைந்தார். அங்கு அவர் குறிப்பிட்ட ஒரு குழுக்களை மட்டும் குறிவைத்ததாக தெரிகிறது. அதாவது, கருப்பினத்தவர்களை குறிவைத்து சுடத் தொடங்கினர்.


துப்பாக்கிச் சத்தத்தை கேட்டதும் கடையில்  உள்ளவர்கள் அலறி  அடித்து ஓடி மறைந்துக் கொண்டனர். இருப்பினும் அவர் மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டார். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.






இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ”தெற்கு அமெரிக்க மாநிலத்தில் உள்ள எட்வர்ட் வாட்டர்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  அங்குள்ள கடையில் உள்ள கருப்பினத்தவர்களை அவர் குறிவைத்து சுட்டுக் கொன்றார். பின்னர், போலீசார் வருவதற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய வெள்ளை இனத்தவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். உயிரிழந்தவர்களில் ஒரு பெண், இரு ஆண்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது” என்றார். 


முன்னதாக, கடந்த வாரம் சனிக்கிழமையன்று, வடகிழக்கு நகரமான பாஸ்டனில் கரீபியன் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஏழு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு சிகாகோவில் நடந்த பேஸ்பால் விளையாட்டில் இரண்டு பெண்கள் சுடப்பட்டனர். அதே இரவில், ஓக்லஹோமாவில் ஒரு உயர்நிலைப் பள்ளி கால்பந்து விளையாட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 16 வயது சிறுவன் துப்பாக்கியால்  சுட்டுக் கொல்லப்பட்டார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.




மேலும் படிக்க 


PM Modi: ’என்னை மன்னிச்சிடுங்க..’ மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி..! என்ன காரணம்?