சமீப காலங்களாக கொலை மற்றும் பாலியல் குற்ற சம்பவங்கள் மரபணு பரிசோதனை வைத்து அதிகளவில் கண்டறியப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இந்த முறையில் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு வழக்கில் கிட்டதட்ட 45 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு ஒன்றில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எப்படி இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளிகளை நெருங்கினர்?


அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் கிளாரன்ஸ் சியட்ஸ். இவர் 1976ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முடி திருத்தும் கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பெயரில் காவல்துறையினர் நீண்ட நாட்களாக தேடியும் அவரை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அதன்பின்னர் நீண்ட நாட்கள் தேடியும் அவர் குறித்த எந்தவித துப்பும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை. 


இதனால் இந்த வழக்கு தொடர்பாக கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வந்துள்ளனர். அவர்களுக்கும் எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் 2019ஆம் ஆண்டு பெண் ஒருவர் காவல்துறையை தொடர்பு கொண்டு ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அந்த விஷயம் தான் இந்த வழக்கில் புதிய திருப்பத்தை அளித்துள்ளது. அந்தப் பெண், “1970களில் நான் 10வயதாக இருந்த போது குயின்ஸ் பகுதியில் வசித்து வந்தேன். அப்போது என்னுடைய தாயின் ஆண் நண்பர் ஒருவரின் சடலத்தை வெட்டி புதைத்து கொண்டிருந்தார். அதை நான் பார்த்தேன். ஆனால் நீண்ட நாட்களாக எனக்கு அதை வெளியே சொல்ல தைரியம் வரவில்லை. ஆனால் தற்போது அதை கூறவேண்டும் என்று நினைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார். 




அந்தப் பெண் கூறிய விஷயங்கள் அனைத்தும் கிட்டதட்ட சியட்ஸ் வழக்குடன் ஒத்து போனதால் காவல்துறையினருக்கு ஒரு பெரிய துருப்புச் சீட்டாக அந்த தகவல் அமைந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண் கூறிய இடத்தில் காவல்துறையினர் தோண்டி அங்கு இருந்த எலும்புகளை எடுத்துள்ளனர். அந்த எலும்பை பரிசோதனை செய்தததில் அது சியட்ஸ் உடைய எழும்பு தான் என்பது தெரியவந்தது. ஆனால் காவல்துறையினருக்கு மேலும் ஒரு பெரிய சவால் இருந்தது. சியட்ஸை இப்படி துண்டு துண்டாக வெட்டியது யார் என்று அவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்தது. 


2019ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 2 ஆண்டுகளாக இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மரபணு பரிசோதனை ஆகியவற்றை செய்து வந்துள்ளது. எனினும் கொலையாளியை காவல்துறையினரால் நெருங்க முடியவில்லை. இறுதியில் ஒரு தனியார் நிறுவனம் வைத்திருந்த மரபணு மாதிரிகளுடன் இந்த குற்றச்சம்பவத்தில் கிடைத்த மரபணு ஒத்து போகியுள்ளது. இதைத் தொடர்ந்து மோட்டா என்ற நபரை காவல்துறையினர் கடந்த புதன்கிழமை கைது செய்துள்ளனர். அவர் 1970களில் அந்தப் பகுதியில் ஒரு முடி திருத்தும் கடை வைத்திருந்துள்ளார். அந்த கடைக்கு செல்லும் போது தான் சியட்ஸ் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது. இதனால் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலை வழக்கில் காவல்துறையினர் உரிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். 


மேலும் படிக்க:29 மணி நேர ஏலத்தில் ரூ.18.5 லட்சத்துக்கு ஏலம் போன வைரல் நாய்..!