அமெரிக்க அதிபர் தேர்தலில் யானை சின்னம் கொண்ட குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டிருந்த நிலையில், கழுதை சின்னம் கொண்ட ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீஸ் போட்டியிட்டிருந்தார். 


அமெரிக்க தேர்தல் முடிவுகள்:


அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையானது தொடங்கியது. 


இந்நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பம் முதலே டிரம்ப்பின் கை ஓங்கியே இருந்தது. இந்நிலையில் மொத்தம் உள்ள 538 இடங்களில் 270 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் , தற்போதைய நிலவரப்படி 277 இடங்களில் முன்னிலை பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி வாகை சூடியுள்ளார். கமலா ஹாரீஸ் 224 இடங்களில் முன்னிலையில் உள்ளார். 


டிரம்ப் வெற்றி:


குறிப்பாக, ஸ்விங்க் மாநிலங்களான அரிசோனா, மிச்சிகன், நவேடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், வட கரோலினா, ஜார்ஜியா  ஆகிய 7 மாநிலங்கள் தீர்மானிக்கும்  மாநிலங்களாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த 7 மாநிலங்களிலுமே டிரம்ப்பே முன்னிலையில் வகித்து வருவதை பார்க்க முடிகிறது. 
 
இந்த தருணத்தில், வெற்றி களிப்பில், டொனால்டு டிரம்ப் உரையாற்றுகையில், தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதையடுத்து, நாட்டின் எதிர்காலம் குறித்து, தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாகமாக கோஷத்தை எழுப்பினர். 
 
இந்நிலையில், சமூக வலைதளங்களில் அமெரிக்க தேர்தலை நீர் யானை கணித்த வீடியோவானது வைரலாகி வருகிறது. 


அமெரிக்க தேர்தல் முடிவுகள் குறித்து , வாக்குப்பதிவுக்கு முன்கூட்டியே சில கணிப்புகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக நீர் யானை, ஆமை, மீன்கள் உள்ளிட்டவைகளை வைத்து கணிப்புகளை நடைபெறுவது பிரபலமாகும். 


இந்நிலையில், நீர் யானைகளை வைத்து கணிப்புகள் நடைபெற்றது. அதில் பழங்களில் டொனால்டு டிரம்ப் மற்றும் கமலா ஹாரீஸ் ஆகியோரின் பெயர்கள் எழுதப்பட்ட வைக்கப்பட்டது.


அதில் , நீர் யானையானது டொனால்டு டிரம்ப் பெயரில் வைக்கப்பட்ட பழங்களை தேர்வு செய்தது. 
இந்நிலையில், நீர் யானையின் கணிப்பானது தற்போது உண்மையாகியுள்ளது. அந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.