அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா மாநிலம் தொடர்பாக பிரபல நடிகை மற்றும் பாடகி பெட்டி மிட்லர் சமீபத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது மேற்கு விர்ஜினியா மாநிலம் மிகவும் ஏழ்மை வாய்ந்த படிப்பறிவு இல்லாதவர்கள் கொண்ட மாநிலமாக உள்ளது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் ஒன்றை வைத்திருந்தார். இது மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. இதன் காரணமாக சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கினார்.
இந்நிலையில் நேற்று மேற்கு விர்ஜினியா மாநிலத்தின் ஆளுநர் ஜிம் ஜஸ்டிஸ் தன்னுடைய மாநில மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், “நம்முடைய மாநிலம் முன்னேறி வரும் என்று யாரும் நம்பவில்லை. நம் மாநிலத்தை பற்றி நிறையே பழைய ஜோக்குகளை கூறி வந்தனர். ஆனால் நாம் அதை பொருட்படுத்தாமல் முன்னேறியுள்ளோம். ஆகவே பெட்டி மிட்லர் போன்ற நம்பிக்கை இல்லாதவர்களுக்கு என்னுடைய இந்த நாய்க்குட்டி கூறுவது ஒன்றுதான்.அதாவது நீங்கள் வந்து என்னுடைய நாயின் பின்புறத்தை முத்தமிடங்கள். அப்போது தான் உங்களுக்கு உண்மை புரியும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் இந்த வீடியோவிற்கு பெட்டி மிட்லர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஜிம் ஜஸ்டிஸ் ஆளுநராக பதவியிலுள்ள பகுதியின் மொத்த வளர்ச்சி ரேங்கிங் பட்டியலை பாருங்கள். இதைப்பார்க்கும்போது ஒரு நாய் கூட அந்த மாநிலத்தில் அவரைவிட நல்ல ஆளுநராக இருக்கும்போல் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு விர்ஜினியா ஆளுநரின் வீடியோ மற்றும் அதற்கு அந்த நடிகையின் பதில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சாதம் சாப்பிட மட்டுமல்ல ஸ்பூன்... சாதனை பண்ணவும்தான்.. இது ஸ்பூன் உலக சாதனை!!