ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர், பால் வழி அண்டத்தில் இதுவரை கண்டிராத அரிய வகை பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இவை பெரிய நட்சத்திரத்தின் சிதறல்களாக இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.


பல்கலைக்கழக ஆராய்சி மாணவர் டைரோன் என்பவர், கடந்த ஆண்டு தனது இளங்கலை ஆய்வறிக்கைக்காக பால்வழி அண்டத்தை கவனித்து தகவல் திரட்டி வந்துள்ளார். அப்போது, ரேடியோ அலைகளை பின் தொடர்ந்து பதிவு செய்யும்போது, பால் வழி அண்டத்தில் மர்மான பொருளை கண்டு தனது குழுவினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து ஆராய்ச்சி செய்த குழுவினர், இந்த மர்மமான பொருள் அவ்வப்போது தோன்றி மறைவதாக இருந்ததை பதிவு செய்துள்ளனர்.






இதனால் ஆச்சர்யம் அடைந்த குழுவினர், இதற்கு முன்பு வானில் உள்ள எந்த பொருளும் இப்படி தோன்றி மறைந்ததில்லை என்றும், மணிக்கு 3 முறை மிக அதிகமான ஆற்றலை வெளிப்படுத்தி செல்வதையும் கண்டறிந்துள்ளனர். குறிப்பிட்ட அந்த பொருளை தொடர்ந்து கவனித்து வந்த ஆராய்ச்சியாளர்கள், இது பெரிய நட்சத்திரத்தில் இருந்து சிதறி கிடக்கும் சிதறல்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என தெரிவிக்கின்றனர்.






இந்த பொருள் பூமியிலிருந்து சுமார் 4,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதிக காந்த சக்தியை கொண்டதாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும், இந்த மர்ம பொருள் பற்றி அதிக தகவல்களை சேகரித்து வரும் ஆராய்ச்சி குழு, விரைவில் உறுதியான தகவலை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாம் ஏலியன்களை தேடுவதை போல ஏலியன்கள் நம்மை தேடி ஏதேனும் தகவல் அனுப்ப முயற்சி செய்யுமா என்ற கோணத்திலும் இந்த ஆராய்ச்சி தொடர்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண