Amazon.com மேலும் 18,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. முன்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் பணியாளர்களைக் குறைப்பதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்ப்பட்டுள்ளதாக, தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸ்ஸியால் புதன்கிழமை வெளியிட்ட பொது ஊழியர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.


அமேசான் பணிநீக்கம்


ட்விட்டர் முதல் பேஸ்புக் வரை பல பெரிய நிறுவனங்கள் கடந்த ஆண்டு பிற்பகுதியில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்தனர். அதில் பெரிதும் பாதிக்கப்பட்டது இந்தியர்கள் தான். தலைமை முதல் கடை நிலை ஊழியர்கள் வரை பாரபட்சமின்றி பணிநீக்கம் நடைபெற்றது. அதே போல அமேசான் நிறுவனத்திலும் மிகப்பெரிய பணிநீக்கம் ஒன்று நடக்க இருப்பதாக நவம்பர் மாதம் முதலே தகவல்கள் கசிந்து வந்தன. அமேசான் நிறுவனர் ஜெப் பேசோஸ்-உம் மிகப்பெரிய பண வீக்கம் வர இருக்கிறது. எல்லோரும் தயாராகுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். அதன் ஒரு பகுதியாக தற்போது அதிகாரப் பூர்வமாக எதிர்பார்த்ததை விட அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



6% பணியாளர்கள் நீக்கம்


ஜனவரி 18 முதல் அமேசான் எடுத்துள்ள பணிநீக்க முடிவுகள் அமலுக்கு வரும் என்றும், அது நிறுவனத்தின் இ-காமர்ஸ் மற்றும் மனித வள நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும், என்றார். அமேசானில் ஏறக்குறைய 3,00,000 பணியாளர்கள் இருந்தனர், அதில் 6% கார்ப்பரேட் பணியாளர்கள் இந்த பணிநீக்கம் மூலம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆண்டு திட்டமிடல் பணிகளை ஒட்டி இந்த பணிநீக்கம் வந்துள்ளதாக குறிப்பிட்ட ஜாஸ்ஸி மேலும் பேசுகையில், "நிச்சயமற்ற பொருளாதாரம் மிகவும் கடினமாக உள்ளது மற்றும் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் நிறைய பணியாளர்களை வேலைக்கு எடுத்துள்ளோம்" என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: பிரபலம்னா மாலையும் வரும் கல்லும் வரும்... ராஷ்மிகா குறித்து பேசிய ’நான் ஈ’ பட வில்லன்!


அமெரிக்காவின் பெரிய நிறுவனம்


அமேசான் கிடங்கு ஊழியர்கள் உட்பட 1.5 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டுள்ளது, இது வால்மார்ட் இன்க் (WMT.N) க்குப் பிறகு அமெரிக்காவின் இரண்டாவது பெரிய தனியார் முதலாளியாக உள்ளது. பெருகிவரும் பணவீக்கம் வணிகங்கள் மற்றும் நுகர்வோர் செலவினங்களைக் குறைப்பதற்கான சூழலை உருவாக்கியதால், அதன் பங்கு விலை கடந்த ஆண்டில் பாதியாகக் குறைந்தது.



தொடரும் பணிநீக்கங்கள்


நவம்பரில் அமேசான் பணியாளர்கள் பிரிவில் இருந்து ஊழியர்களை அனுப்பத் திட்டமிடத் தொடங்கியது. 10,000 பேரை பணிநீக்கம் செய்வதை இலக்காகக் கொண்டிருந்ததாக அந்த நேரத்தில் ராய்ட்டர்ஸ் ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருந்தது. கடந்த வருடம் ட்விட்டர் நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70% வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள் என்று பின்னர் தெரியவந்தது. ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஆட் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தற்போது மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும் ஆட் குறைப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.