3 மனைவிகள் கட்டிய பாகிஸ்தான் நபருக்கு 60வது குழந்தை பிறந்தது. பாகிஸ்தானை சேர்ந்தவர் சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி. 50 வயதான அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள ஜன் முகமது கில்ஜி இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்காக 4வது திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
முகமது கில்ஜி பற்றிய செய்தி ட்விட்டர் தளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்தத் தகவலை சம்ஷத்நெட்வொர்க் என்ற செய்தி நிறுவனம் பகிரந்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா நகரைச் சேர்ந்த சர்தார் ஜன் முகமது கில்ஜி 60வது குழந்தைக்கு தந்தையானார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக பிறந்த குழந்தைக்கு குஷால் என்று பெயரிடப்பட்டுள்ளது.
மருத்துவரான சர்தார் ஜன் முகமது கில்ஜி, 4வது திருமணத்திற்காக நண்பர்கள், தெரிந்தவர்களிடம் தனக்கு பெண் பார்க்கச் சொல்லி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளை பெற்றுக் கொள்ளவே அதிக விருப்பம் என்று கூறினார். இதனாலேயே 4வது திருமணத்திற்கு பெண் தேடுவதாகவும் கூறினார். ஆனால் கில்ஜியின் 3 மனைவிகளுமே இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.
Sardar Jan, a resident of Quetta, became the father of the “sixtieth” child.
Sardarjan Mohammad Khan, a resident of Quetta, the Capital of Balochistan, said his sixtieth child was given birth yesterday.
Jan uttered the newborn child is a baby son and he named him Khushal. pic.twitter.com/OHxbYm35k
— ShamshadNews (@Shamshadnetwork) January 3, 2023
அந்த ட்வீட்டின் கீழ் பலரும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஒருவர் நீங்கள் 100 பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். ஆனால் தயவு செய்து எல்லை தாண்டி இந்தியாவுக்கு வந்து விடாதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு ட்விட்டராட்டி, அவர் மட்டும் அவரது 60 பிள்ளைகளின் பெயரையும் குழப்பமில்லாமல் சொல்லிவிடுவாரா எனப் பார்ப்போம் என்று சவால் விடுத்துள்ளார். இவ்வாறாக பல சுவாரஸ்ய பின்னூட்டங்கள் பதியப்பட்டு வருகின்றன. சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத ரகமாக ஒவ்வொன்றும் இருக்கின்றன என்று சொல்லியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.