இந்தியா - புருனே இடையே தூதரக உறவு ஏற்பட்டு 40 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் புருனே நாட்டிற்கு சென்றுள்ளார்.


இரண்டு நாள் பயணமாக புருனே தலைநகர் பந்தர் செரி பெகவான் சென்ற பிரதர் மோடிக்கு  அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்,சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்த பிரதமர் மோடி இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் புருனே நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றார்.


யார் இந்த  சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா? (Sultan Hassanal Bolkiah)


ஹாஜி ஹசனல் போல்கியா வசிக்கும் இஸ்தானா நூருல் இமான் என்ற மாளிகை உலகிலேயே விலை மதிப்பு மிக்க அரண்மனை என்று சொல்லப்படுகிறது. மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பிறகு நீண்ட காலம் ஆட்சி செய்யும் மன்னர் என்ற பெருமைக்குரியவர்  ஹசனல் போல்கியா. இவருடைய வாழ்க்கைச் சூழல் பிரம்பிக்கு ஏற்படுத்த கூடியாத உள்ளது. தோராயமாக ரூ.30 பில்லியன் டாலர் இவரது சொத்து மதிப்பு என்று சொல்லப்படுகிறது. இவர் வசிக்கும் அரண்மனையில் 1,700 அறைகள் உள்ளன. 2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அரண்மனை அமைந்துள்ளது. தங்கத்தில் செய்யப்பட்ட கோப்ய்ரமும் அரண்மனையில் இருக்கிறது. 257 குளிப்பறை/ கழிப்பறை, 5 நீச்சல் குளம் உள்ளிட்டவை அரண்மனையில் இருக்கிறது. இந்த அரண்மனை 1984-ல் 1.4 பில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்டதாகும். அவரிடம் கார் நிறுத்தும் இடம் மட்டும் 110 உள்ளது.


ஹசனல் போல்கியாவிற்கு சொகுசு கார்கள் கலெக்ட் செய்வது என்பது ரொம்பவே ப்ரியமாம். இவரிடம் 7,000 வாகனங்கள் இருக்கின்றன. இதில்  600 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள். அதிக ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பதற்கான உலக கின்னஸ் சாதனையே மன்னர் ஹசனல் போல்கியா படைத்துள்ளார். இதுதவிர, சுமார் 450 ஃபெராரி , 380 பென்ட்லி கார்களும் வைத்துள்ளார். மேலும், போர்ஷே, லம்போர்கினி, மேபேக், ஜாகுவார், பிஎம்டபிள்யூ மற்றும் மெக்லாரன் ரக கார்களும் ஹசனல் போல்கியாவிடம் இருக்கிறதாம்.


24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரும் இவரிடம் இருக்கிறது. ஹசனல் போல்கியாவின் கரேஜில் உள்ள மொத்த கார்களின் மதிப்பே 5 பில்லியன் டாலர் ஆகும்.


இவற்றோடு  Boeing 747-400, a Boeing 767-200, and an Airbus A340-200 உள்ளிட்ட தனி விமானம் இருக்கிறது. இந்த விமானங்கள் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒன்றின் மதிப்பு 400 மில்லியன் டாலர் ஆகும்.


இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் பயின்ற  Royal Military Academy Sandhurst-ல் இவரும் ராயல் மிலிட்ரி அகாடமியில் படித்தவர்.