நீச்சல் குளத்தில் குதித்த குழந்தையை காப்பாற்றிய தாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
உலகத்தில் தாயின் சக்தியை விட பெரியது எதுவும் இல்லை என்று சொல்வார்கள். ஏனென்றால் தங்களின் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் உயிரை கூட கொடுத்து காப்பாற்றும் அளவு அன்பு உள்ளவர்தான் தாய். அதனால்தான் தாயின் அன்புக்கு நிகரில்லை என்று கூட சொல்வார்கள்.
குழந்தையை காப்பாற்றிய தாய்
குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்,அதுவும் அவர்கள் பார்ப்பதை எல்லாம், தனக்கு வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மேலும் அவர்களுக்கு உலகில் பார்ப்பவை எல்லாம் வித்தியாசமாக தோன்றும்.அதனாலே அதை தொட்டு பார்க்க ஆசைப்படுவார்கள்.டுவிட்டரில் தி ஃபைஜன் எனும் பயனாளி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் குழந்தை விளையாட்டுத்தனமாக நீச்சல் குளத்தின் அருகில் சென்றது. நீச்சல் குளத்தின் அருகில் சென்றதும், திடீரென அக்குழந்தை நீச்சல் குழந்தை குதித்தது. அப்போது சுதாரித்துக் கொண்ட அவரது தாய், குழந்தை அணிந்திருந்த பனியனை பிடித்து சட்டென்று தூக்கி விட்டார். தக்க சமயத்தில் வந்து குழந்தையின் உயிரை தாய் காப்பாற்றிவிட்டார்.
தாய்க்கு பாராட்டு:
குழந்தையை தாய் காப்பாற்றிய வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் லைக் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.வீடியோவை பார்த்த பலரும் தாயின் செயலை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.இது போன்ற வீடியோ, வெளிவருவது ,முதல் முறையல்ல;கடந்த ஆண்டு இதே போன்று , குழந்தையை தாய் காப்பாற்று வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.