பணியா? குடும்பமா? இல்லை தன்நலனில் அக்கறை செலுத்துவதா? இப்படியான கேள்வியை ஒவ்வொரு பெண் முன் இருக்கும் ஒன்றாகும். இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள. பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மாதவிடாய் கால வலி, உடல் உபாதைகள், ஆரோக்கியமற்ற மனநிலை.இதற்கு உலகில் உள்ள சில நாடுகளில் மாதவிடாய் கால விடுமுறை வழங்கப்படுகிறது. அந்தவகையில், ஐரோப்பிய பிராந்தியத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.


பெண்கள் மாதவிடாய் காலத்தில் பணியிடத்தில் விடுப்பு எடுக்கும் விதத்தில் ஸ்பெயின் அரசு புதிய திட்டத்தை அடுத்த வாரத்தில் அமல்படுத்த உள்ளது. 


ஸ்பெயின் வானொலியான Cadena Ser-இல் தெரிவித்த செய்தியின்படி, மாதவிடாய் விடுமுறையை அனுமதிக்க ஸ்பெயின் அரசு புதிய திட்டவரைவை உருவாக்கியுள்ளதாகவும், இது அடுத்த வாரம் முதல் அமல்படுத்த உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


உலகில் ஆசிய நாடுகளான ஜப்பான், தென் கொரியா, இந்தோனிசியா மற்றும் ஷாம்பியா ஆகிய நாடுகளில் மாதவிடாய் கால விடுப்பு எடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 





ஸ்பெயின் அரசின் Gynaecology and Obstetrics Society-யின் தரவுகளின்படி,மூன்றில் ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதாக தெரிவிக்கிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக வலி டைசெமோனரியா (dysmenorrhea) என்று சொல்லப்படுகிறது. இதன் அறிகுறி கடுமையான அடிவயிறு வலி, காய்ச்சல், கடும் தலைவலி,வயிற்றுப்போக்கு ஆகியவைகள் ஆகும். 
 
ஸ்பெயின் நாட்டின் சம உரிமைகள் துறைகளுக்கான செயலாளர் Angela Rodriguez கூறுகையில், ஒருவருக்கு உடல் உபாதையோ, காய்ச்சல், உடல் வலி ஏற்பட்டால், அவருடைய உடல் ஆரோக்கியம் கருதி பணியில் இருந்து அவருக்கு விடுப்பு வழங்கப்படுகிறது. அப்படியெனில், பெண்கள் மாதம்தோறும் சந்திக்கும் பிரச்சனைக்கு விடுமுறை அளிப்பதுதான் சரியானது.” என்று நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்


மேலும், ஸ்பெயியினில் உள்ள பள்ளிகளில் உள்ள சிறுமிகளுக்கு சானிடரி நாப்கின், டாம்பூன்ஸ் ஆகியவைகளை விலையில்லாமல் கொடுக்க உள்ளது. சூப்பர்- மார்க்கெட்களில் சானிடரி நாப்கின்களுக்கு வாட் வரியையும் நீக்க உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் முதன்முதலாக மாதவிடாய் விடுமுறை அறிமுகம் செய்துள்ள நாடாக ஸ்பெயின் இருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண