ஜூலை 9 ஆம் தேதி சிட்னி-புது டெல்லி விமானத்தில் ஏர் இந்தியாவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் பயணியால் தாக்கப்பட்டார். ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில், விமானத்தில் அடிப்படை விதிகள் தொடர்பாக மோதல் ஏற்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் சிவில் ஏவியேஷன் ஜெனரல் (டிஜிசிஏ) க்கு தெரிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
AI 301 என்ற விமானத்தில் சிட்னியிலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமான சேவை துறையின் தலைவர் சந்தீப் வர்மா, விமானம் வானில் பறந்து கொண்டு இருந்தபோது டெல்லியைச் சேர்ந்த பயணியால் தாக்கப்பட்டார். இருப்பினும், அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை," என்றும் ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஜூலை 9, 2023 அன்று சிட்னி-டெல்லியில் இயங்கும் AI 301 விமானத்தில் பயணித்த ஒருவர், ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதன் பின்னர், நிர்வாகத்தரப்பில் இருந்து வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுக்குள் அடங்காத அந்த பயணி, விமானம் விண்ணில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் விண்ணில் பயண விதிகளை மீறியுள்ளார். இது மட்டும் இல்லாமல், பயணியை ஒழுங்குபடுத்த நினைத்த ஊழியர்களில் ஒருவரை உள்ளடக்கிய மற்ற பயணிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது" என்று விமானச் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கோபப்பட்ட பயணி ஒருவழியாக ஒரு கட்டத்துக்கு மேல் அமைதியாகியுள்ளார். இதற்கிடையில் விமானம் டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியதும், பயணி மீது தான் தவறு என்பதுபோல், பயணியை பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படடைத்துள்ளனர். ஏர் இந்தியா அதிகாரிகள். பாதுகாப்பு அதிகாரிகளும் ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது தான் உண்மை என கருதி கிடுக்குப் பிடி பிடிக்க பயணி எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதன் பின்னர் தான் இந்த சம்பவம் குறித்து டிஜிசிஏ-வுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏர் இந்தியா தவறான நடத்தைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைகலப்புக்கு காரணம் இதுதான்
வணிக வகுப்பு இட ஒதுக்கீடு பெற்றிருந்த சந்தீப் வர்மா, சில வணிக வகுப்பு இருக்கைகள் செயலிழந்ததால் பொருளாதார வகுப்பில் பயணிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட சந்தீப் வர்மாவுக்கு பொருளாதார வகுப்பில் இருக்கை எண் 30 ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்தவர், காலியாக இருந்த 25வது எண் இருக்கைக்குச் சென்றுள்ளார். இதற்கிடையில் சில மது பாட்டில்களை எடுத்து அருந்தியவருக்கு போதை தலைக்கேறியதால், விமானத்தில் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார். குறிப்பாக சத்தமிட்டதுடன் போதையில் தள்ளாடி பயணிகள் மீது விழுந்துள்ளார். இதனால் கடுப்பான பயணிதான் போதையில் தள்ளாடிக்கொண்டிருந்த விமான சேவை துறையின் தலைவர் சந்தீப் வர்மாவை சாத்து சாத்துவென தாக்கி, முடியைப் பிடித்து இழுத்து தலையைத் திருகியுள்ளார். இதற்குள் விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் உட்பட பயணிகளும் இணைந்து பயணியிடம் இருந்து விமான சேவை துறையின் தலைவர் சந்தீப் வர்மாவை காப்பற்றியுள்ளனர்.