ஜூன் மாதம் ஜெனிவா-பாரிஸ் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது விமானி அறையில் சண்டையிட்டதற்காக ஏர் பிரான்ஸ் அவர்களது இரண்டு விமானிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. 


யாருக்கும் பாதிப்பில்லை


இருவரும் சண்டை இட்டுக்கொண்டிருந்த போதிலும், விமானம் தொடர்ந்து பறந்துகொண்டிருந்தது. மேலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக தரையிறங்கியது என்று தகவல்கள் கிடைத்தன. இதனால் ஏற்பட்ட சர்ச்சை மற்ற விமானங்கள் எதையும் பாதிக்கவில்லை என்றும் விமான அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சுவிஸ் லா ட்ரிப்யூன் நாளிதழின் அறிக்கையின்படி, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானி மற்றும் துணை விமானி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்பட்ட தகராற்றில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு உள்ளனர். ஒருவரையொருவர் காலரைப் பிடித்துக் கொண்டு சண்டையிட்டு உள்ளனர்.



விமானி அறையில் சண்டை


பின்னர் இவர்கள் சண்டையில் கேபின் குழுவினர் தலையிட்டுள்ளனர். மீண்டும் சண்டை விடாமல் இருக்க ஒரே ஒரு குழு உறுப்பினர் மட்டும் விமானிகளுடன் விமானி அறையில் பயணம் முழுவதும் இருந்துள்ளார் என்று அறிக்கைகள் கூறுகின்றன. சில ஏர் பிரான்ஸ் விமானிகள் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு மதிப்பளிப்பதில் தீவிரம் காட்டுவதில்லை என்று பிரான்சின் விமான விசாரணை நிறுவனமான BEA கடந்த வாரம் வெளியான அறிக்கை ஒன்றை வெளியிட்ட பிறகு சண்டை பற்றிய செய்தி வெளிவந்தது.


தொடர்ND vs PAK: தர்மம் தோற்காதே ஆளும் காவலனே... ஹர்திக் பாண்ட்யாவிற்கு தலை வணங்கிய கார்த்திக்.. வைரல் படம்..


ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிரச்சனை


2020 டிசம்பரில் காங்கோ குடியரசின் பிரஸ்ஸாவில்லியில் இருந்து பாரிஸுக்கு ஏர் பிரான்ஸ் விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதை பற்றி இந்த அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. விமானிகள் விமானத்தின் பாதையை மாற்றியமைத்த போதிலும் எஞ்சினை ஆப் செய்யவில்லை என்றும், தரையிறங்குவதற்கான செய்முறைகள் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. விமானம் சாட் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது, ஆனால் BEA அறிக்கையின்படி, இயந்திரத்தில் தீப்பிடித்திருக்கலாம் என்று எச்சரித்துள்ளது.



உறுதியளித்த ஏர் ஃபிரான்ஸ்


2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கு இடையில் இதேபோன்று மூன்று முறை நடைபெற்றிருப்பது குறிப்பிட்டுள்ளது. சில விமானிகள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக நிலைமையை தனிப்பட்ட முறையில் பகுப்பாய்வு செய்து செயல்படுவதாக அறிக்கை கூறுகிறது. ஏப்ரலில் நியூயார்க் நகரத்தின் JFK விமான நிலையத்திலிருந்து ஏர் பிரான்ஸ் விமானம் பாரிஸில் தரையிறங்கும்போது விமானக் கட்டுப்பாட்டுச் சிக்கலைச் சந்தித்த சம்பவத்தையும் BEA விசாரித்தது. இதற்கு பதில் தெரிவித்த ஏர் பிரான்ஸ் பாதுகாப்பு தணிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. அது BEA இன் பரிந்துரைகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்தது, அதில் விமானிகள் தங்கள் விமானங்களைப் புரிந்துகொள்ள அனுமதிப்பது மற்றும் பயிற்சிக் கையேடுகளை நடைமுறைக்குக் கடைப்பிடிப்பது குறித்து கடுமையாக்குவது ஆகியவை அடங்குகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான விமானங்களை இயக்குவதாகவும், இதுபோன்ற நான்கு பாதுகாப்பு சம்பவங்களை மட்டுமே அறிக்கையில் குறிப்பிடுவதாகவும் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஏர் பிரான்ஸ் விமானிகளின் தொழிற்சங்கங்கள் அனைத்து விமானிகளுக்கும் பாதுகாப்பு மிக முக்கியம் என்று வலியுறுத்தியது. மேலும் அவசரகால சூழ்நிலைகளில் விமானிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.