ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி புவனேஸ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி(35),ஜடேஜா(35)மற்றும் ஹர்திக் பாண்ட்யா(33*) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்காரணமாக இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. 


இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா பேட்டிங்கின் போது ஆட்டத்தின் 20 ஓவரை பாகிஸ்தான் வீரர் நவாஸ் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன் அடித்தார். மூன்றாவது பந்தை ஹர்திக் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்கவில்லை. இதனால் இந்திய வெற்றிக்கு 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பாண்ட்யா தினேஷ் கார்த்திக்கை பார்த்து நான் பார்த்து கொள்கிறேன் என்பது போல் ஒரு சைகையை காட்டினார். அதற்கு அடுத்த பந்தில் ஹர்திக் பாண்ட்யா அசத்தலாக சிக்சர் விளாசி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 






அதன்பின்னர் ஹர்திக் பாண்ட்யாவை பார்த்து தினேஷ் கார்த்திக் தலை வணங்கினார். இந்தப் படம் தற்போது ட்விட்டர் தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்தப் படத்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். 














இவ்வாறு பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த போட்டியில் வரும் 31-ம் தேதி ஹாங்காங் அணியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் சூப்பர் 4 போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.