கண்டனம் தெரிவித்த இந்தியா..! மறுப்பு தெரிவித்த கனடா..! பகவத் கீதா பூங்கா விவகாரத்தில் நடந்தது என்ன..?

பிரம்டன் நகரில் சமீபத்தில் திறக்கப்பட்ட 'ஸ்ரீ பகவத் கீதை' பூங்கா சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தை இந்தியா கண்டித்து, நகர நிர்வாகத்தை துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தது.

Continues below advertisement

கனடாவில் இந்தியாவுக்கு எதிரான போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டு வரும் சூழலில், அங்கு பிரம்டன் நகரில் சமீபத்தில் திறக்கப்பட்ட 'ஸ்ரீ பகவத் கீதை' பூங்கா சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

Continues below advertisement

 

இந்த சம்பவத்தை இந்தியா கண்டித்து, நகர நிர்வாகத்தை துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், பூங்காவுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் கனட அலுவலர்கள் மறுத்துள்ளனர். மேலும், பழுதுபார்க்கும் பணியின் போது வெற்று பலகை வைக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.

முன்பு, டிராயர்ஸ் பார்க் என்று அழைக்கப்பட்ட இந்த பூங்கா, ஸ்ரீ பகவத் கீதா பூங்கா என மறுபெயரிடப்பட்டு செப்டம்பர் 28 அன்று திறக்கப்பட்டது. சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள கனடாவில் உள்ள இந்திய தூதரகம், "பிரம்டனில் நகரில் உள்ள ஸ்ரீ பகவத் கீதை பூங்காவில் நடந்த வெறுப்பு குற்றத்தை நாங்கள் கண்டிக்கிறோம்.

கனட அலுவலர்கள் மற்றும் காவல்துறை விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. பிரம்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் ஞாயிற்றுக்கிழமை இரவு ட்விட்டரில் இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் ட்விட்டர் பக்கத்தில், "சமீபத்தில் திறக்கப்பட்ட ஸ்ரீ பகவத் கீதை பூங்காவை சேதப்படுத்தியதாக நேற்று செய்திகள் வெளியானதை தொடர்ந்து, நாங்கள் மேலும் விசாரிக்க விரைவான நடவடிக்கை எடுத்தோம். ஸ்ரீ பகவத் கீதை பூங்கா என அச்சிடப்பட்டுள்ள நிரந்தர பலகை அங்கு வைக்கப்படும் வரை வெற்று பலகையானது, பூங்காவை கட்டியவரால் நிறுவப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.

இந்த பிரச்னையை எழுப்பிய இந்திய சமூகத்துக்கும் மேயர் நன்றி தெரிவித்தார். "இந்த முடிவைப் பற்றி அறிந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக நாங்கள் இந்திய சமூகத்திற்கு நன்றி கூறுகிறோம். மேலும், பிரம்டனை பாதுகாப்பான அனைவரும் உள்ளடக்கிய இடமாக இருப்பதை உறுதிசெய்ய உறுதி ஏற்கிறோம். 

வெற்றுப் பலகை பழுதுபார்க்கும் போது விடப்பட்டது. இது ஒரு வழக்கமான செயல்முறை அல்ல. ஏனெனில், சேதம் அல்லது அதன் பெயர் மாறாத வரை அதை அகற்றமாட்டோம்" என்று அவர் மற்றொரு ட்வீட்டில் கூறினார்.

கடந்த மாதம், கனடாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக வெறுப்பு குற்றங்கள், மதவெறி வன்முறைகள் ஆகியவை அதிகரித்துள்ளது குறித்து இந்தியா எச்சரித்துள்ளது. கவனமாக இருக்குமாறு கனடா வாழ் இந்திய மாணவர்களை இந்திய அரசு கேட்டு கொண்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola