Watch Video: செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண்ணை திடீரென அறைந்த யானை..- வைரல் வீடியோ !
யானை ஒன்று இளம்பெண்ணை அறையும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

சமூகவலைதளங்களில் எப்போதும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக யானைகள் தொடர்பான வீடியோ என்றால் நிச்சயம் வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது யானை ஒன்று இளம்பெண் ஒருவரை அறையும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
Just In




இது தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சில பெண்கள் யானை ஒன்றை சுற்றி நிற்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் அந்த யானையை செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் யானை திடீரென்று அவரை அறைந்துள்ளது. இதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பலரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் இது தொடர்பான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் யானை ஒன்று இப்படி நடந்து கொண்டதை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என்பது போல் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்