ஆப்கானிஸ்தானின் குண்டூஸில் உள்ள மசூதியில் நேற்று மாலை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், 100 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஏரளாமானோர் படுகாயமடைந்துள்ளனர். தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் மோசமான தாக்குதல் இதுவாகும்.


சிறுபான்மை ஷியா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மக்களை குறிவைத்து இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் ஆப்கான் பிரிவான ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சீனாவின் வலியுறுத்தலால், உய்கர் முஸ்லிம்களை ஒடுக்க முனையும் தலிபான்கள், ஷியா பிரிவினருக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 


 






"தலிபான்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தயாராக இருப்பதாக எங்கள் ஷியா சகோதரர்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று குந்துஸ் மாகாண துணை போலீஸ் தலைவர் தோஸ்த் முகமது ஒபைதா கூறினார்.


இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்துக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘பாதுகாப்புக் கவுன்சிலின் உறுப்பினர்கள், பயங்கரவாத செயல்கள் எந்த இடத்திலும், எப்போது, யாரால் செய்தாலும், அவற்றின் உந்துதல் எதுவாக இருந்தாலும், அவை  நியாயப்படுத்த முடியாதவை என்று மீண்டும் வலியுறுத்தினர். சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம், பயங்கரவாத செயல்களால் ஏற்படும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் பிற கடமைகளுக்கு இணங்க, அனைத்து அரசுகளும் அனைத்து வழிகளிலும் போராட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






எந்தவொரு இழப்பும் மிகப்பெரும் துயரம் என்றும், குண்டுவெடிப்பில் அன்புக்கு உரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறோம் எனவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சகி கூறியுள்ளார்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண