ஆப்கானிஸ்தானில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் குந்தூஸ் மாகாண மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 100 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


abcnews வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் இருக்கும் ஷியா முஸ்லீம்களை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 100 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தலிபான் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.  இதுவரை இந்த குண்டுவெடிப்புக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும், ஷியா முஸ்லீம்களுக்கும் நீண்ட கால தாக்குதல் வரலாறு இருப்பது குறிப்பிடத்தக்கது