ஆப்கானிஸ்தான்: ஃபைசாபாத்தில் இருந்து 265 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  நிலப்பரப்பிலிருந்து பூமிக்கடியில் 113 கி.மீ ஆழத்தில் காலை 6.07 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அலவுகோளில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. 


காலை 6.25 மணிக்கு மீண்டும் ஃபைசாபாத்தில் இருந்து 259 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்பிலிருந்து பூமிக்கடியில் 150 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 


காலை 7 மணிக்கு ஃபைசாபாத்திலிருந்து 279 கி.மீ தொலைவில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலப்பரப்பிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோளில் 5.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 


மீண்டும் காலை 7.37 மணிக்கு ஃபைசாபாத்திலிருந்து 299 கி.மீ தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 10 கி.மீ ஆழத்தில் நான்காவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.8ஆக பதிவானது. 


அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குளுங்கின. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால் இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலகள் வெளியாகவில்லை. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமா என அச்சத்தில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.