பஞ்சாப் மாநில தலைநகராக விளங்குவது சண்டிகர். சண்டிகரில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாணவிகள் விடுதி தனியாக இயங்கி வருகிறது.


இந்த நிலையில், இந்த பல்கலைகழகத்தில் பயிலும் மாணவிகள் ஏராளமானோர் குளிக்கும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்தது. சுமார் 60 மாணவிகள் குளிக்கும் வீடியோக்கள் இணையத்தில் திடீரென பரவியதால், மாணவிகள், மாணவிகளின் நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த சம்பவத்தால், ஆத்திரமடைந்த சக மாணவிகள் நேற்று நள்ளிரவு பல்கலைகழக வளாகத்திற்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மிகப்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவிகளை சமாதானப்படுத்தினர்.






முதற்கட்ட விசாரணையில், பல்கலைகழக விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவர், சக மாணவிகள் குளியலறையில் குளிக்கும்போது ரகசியாக வீடியோவாக எடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் விசாரணையில் கைது செய்யப்பட்ட மாணவி தான் குளிக்கும் வீடியோவை மட்டும் தான் தனது காதலனுக்கு அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. மற்ற மாணவிகளின் வீடியோவை யாருக்கும் அனுப்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில்,  டாக்டர் பாவா என்பவர் அதிகாரப்பூர்வமாக ட்வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களில் 60 மாணவிகளின் குளியலைறை வீடியோ பரவியதாக கூறப்பட்டதில் உண்மை இல்லை என அவர் கூறியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள மாணவியின் மொபைல் போன் தடயவியல் ஆய்வுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மாணாவி தான் குளிக்கும் வீடியோவை மட்டும் தான் தனது காதலனுக்கு அனுப்பியுள்ளார். மற்ற மாணவிகளில் வீடியோ வெளியில் கசியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.   சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதாக கூறப்பட்டிருப்பது ஆதாரமற்றது மற்றும் வதந்தியை யாரோ வேண்டும் என்றே பரப்புகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.  


 மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, "பஞ்சாப் காவல் துறையிடம் பல்கலைக்கழக நிர்வாகம் தானாக முன்வந்து ஒரு மாணவியின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து கைது செய்துள்ளது. ”. அனைத்து மொபைல் போன்கள் மற்றும் பிற பொருட்கள்  விசாரணைக்காக காவல்துறை காவல்துறை மேலதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, சண்டிகர் பல்கலைக்கழகம் விசாரணையில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறப்படுகிறது. "எங்கள் அனைத்து மாணவிகளின், குறிப்பாக எங்கள் மகள் போன்ற பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும்  உறுதி செய்வதில் பல்கலைக்கழகம் முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் உள்ளது என்பதை பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டதாக நினைத்த மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்தார்கள் என்பது போன்ற   செய்திகள் ஆதாரமற்றவை என்றும் பல்கலைக்கழகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது. தற்கொலை முயறச்சி குறித்த விவகாரத்தில், “எந்தப் பெண்ணும் இப்படிப்பட்ட முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. இந்த சம்பவத்தில் எந்த மாணவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை” என்றும் கூறப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்டுள்ள மாணவியை கையும் களவுமாக பிடித்ததாகவும், பின்னர் வார்டனிடம் ஒப்படைத்ததாகவும் மாணவிகள் கூறுகின்றனர். இந்த விஷயம்  தெரிந்ததும், பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக இந்த விஷயத்தை மூடிமறைக்க முயற்சித்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனாலேயே அவர்களில் பலர் பல்கலைக்கழகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.