மறைந்த ராணி 2ம் எலிசபெத்தின் இறுதி சடங்கு இங்கிலாந்தில் உள்ள 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பூங்காக்கள், ஆலயங்கள் உள்ளிட்ட இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இறுதி சடங்கினை பார்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 


வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை மூலம் நேரடியாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் என்று கலாச்சாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.






செப்டம்பர் 8 ஆம் தேதி 96 வயதில் இறந்த பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி 2ம் எலிசபெத் இறுதிச் சடங்கில் உலகம் முழுவதிலுமிருந்து குடியரசு தலைவர்கள், பிரதமர்கள் மற்றும் அரச குடும்பங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1997 இல் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்குகள், 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் அரச திருமணங்கள் உட்பட சமீபத்திய பிரிட்டிஷ் வரலாற்றின் பிற முக்கிய நிகழ்வுகளை காட்டிலும், ராணி 2ம் எலிசபெத் இறுதிச் சடங்கிற்கு அந்நாட்டு அரசாங்கம் பொது விடுமுறையை அறிவித்துள்ளது.


மறைந்த ராணி 2ம் எலிசபெத்தின் இறுதி சடங்கு இங்கிலாந்தில் உள்ள 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும்  திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் சினிமா சங்கம் தெரிவித்துள்ளது.





 

இன்று அதிகாலை வரை வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ள ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் கடந்த வாரம் முதல் மணிக்கணக்கில் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 






இந்தநிலையில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, லண்டனில் உள்ள ராணி எலிசபெத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.