குழந்தையின் அழுகையை நிறுத்த பால் பாட்டிலில் மதுவை ஊற்றி பெற்ற தாயே கொடுத்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. 


அமெரிக்காவின் லாஸ் ஏன்சல்ஸ் நகரில் இருந்து 55 மைல்ஸ் தூரத்டில் இருக்கும் ரியால்டோ நகரில் நடந்த சம்பவம் கலிஃபோர்னியா மாகாணத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 37 வயதான ஹானஸ்டி டி லா டொர்ரே என்ற 37 வயது பெண்ணிற்கு ஜூன் மாத இறுதியில் குழந்தை பிறந்துள்ளது.  ஒன்றை மாத குழந்தையுடன் ஹானஸ்டி காரில் பயணம் செய்துள்ளார். அப்பொது குழந்தை பசியால் அழுதுள்ளது. 


குழந்தையின் பசியைப் போக்காமல் அழுகையை நிறுத்த போராடிய ஹானஸ்டி, தன்னிடம் இருந்த மதுவை பால் டப்பாவில் ஊற்றி குழந்தைக்கு கொடுத்துள்ளார். பசியில் மதுவை குடித்த குழந்தை போதையில் மயங்கியுள்ளது. வழியில் அந்த பெண்ணின் காரை மடக்கிப் பிடித்த போலீசார் விசாரித்துள்ளனர்.


அதில் குழந்தை மீது மதுவாடை வந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. மருத்துவமனையில் குழந்தை மதுபோதையில் இருந்ததை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் குழந்தையின் அழுகையை நிறுத்த மதுவை பால் டப்பாவில்  ஊற்றி கொடுத்ததை அந்த பெண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.


தற்போது விசாரணையில் இருக்கும் ஹானஸ்டி டி லாலா டொர்ரே பினைய பணமாக ரூ.50 லட்சத்தை  நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளார். குழந்தைக்கு மது கொடுத்த அந்த பெண் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  இதேபோன்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவமும் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. 31 வயதான கிரிஸ்டெல் என்ற பெண் தனது 11 மாத குழந்தையை கொலை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா சென்ற அந்த பெண் தனது குழந்தையை 10 நாட்களாக கவனிக்காமல் விட்டதாகவும், அதனால்,  குழந்தை இறந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!