நம் தாத்தா பாட்டிகள் காலக் கதைகளில் கேட்டிருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் பலரை திருமணம் செய்வது என்பது சகஜமான ஒன்றல்ல. காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இரண்டு பேர் மீது காதல் கொள்ளும் விஜய் சேதுபதியே சின்னபின்னமானார், ஆனால், ஒரே நேரத்தில் பிறந்த சகோதரிகள் மூன்று பேர் ஒரே ஆணை திருமணம் செய்து கொண்ட ஒரு வித்தியாசமான சம்பவம் கென்யாவில் நடந்துள்ளது.


மூன்று பேரை ஒன்றாக மனந்த நபர்


டெய்லி ஸ்டார் அறிக்கையின்படி, ஒரே பிரசவத்தில் பிறந்த கேட், ஈவ் மற்றும் மேரி என்ற மூன்று சகோதரிகள் சேர்ந்து கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற நபரை மணந்தனர். கேட் முதலில் ஸ்டீவோவைதான் சந்தித்துள்ளார், மேலும் அதவ்ன்பிறகு இந்த வித்தியாசமான காதல் சூழ்நிலையால் உருவாகி உள்ளது. கேட்-ஐ சந்தித்த பின் அந்த நபர் அவரது சகோதரிகளை சந்தித்தார். மூவரையும் சந்தித்த பின்பு, மூவருடனான அவரது தொடர்பு குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் ஒரு பெண்ணுக்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்ற உணர்ந்ததாக அந்த நபர் பதிலளித்தார். விரைவில், அந்த நபர் மூன்று சகோதரிகளையும் திருமணமும் செய்து கொண்டார்.



இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை


தான் பலரை மணப்பதற்காகவே பிறந்ததாகக் கூறும் ஸ்டீவோ, தனது வாழ்க்கையில் மூன்று பெண்களுடன்தான் திருப்தி அடைவதாகக் கூறினார். மூன்று பெண்களின் தேவைகளையும் விருப்பங்களையும் சமமாகப் பூர்த்தி செய்வது கடினம் இல்லையா என்று கேட்டதற்கு, ஸ்டீவோ, "நான் மூன்று பெண்களை திருப்திப்படுத்த முடியும் என்பதில் மக்கள் ஏன் அவநம்பிக்கை கொள்கிறார்கள், அது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லை." என்று பதிலளித்தார்.


தொடர்புடைய செய்திகள்: Prakash Raj Slams Centre : "காரி துப்பினாலும் கூட புத்திவரவில்லையே.. ஆஸ்கர் இல்லை என குமுறுகிறார்கள்" பிரகாஷ்ராஜ் காட்டமான விமர்சனம்..


அட்டவணை போட்டு காதல்


அனைத்து பெண்களுக்கும் இடமளிக்கும் வகையில் அவர் ஒரு கால அட்டவணையை கடைபிடிப்பதாக அந்த நபர் கூறினார். திங்கட்கிழமைகள் மேரிக்கும், செவ்வாய்க் கிழமைகள் கேட்டிற்கும், புதன் கிழமை ஈவிற்கும் உரியது என்று அவர் கூறினார். இதற்கிடையில், சகோதரிகள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறார்களா என்று உறுதியாக தெரியவில்லை. "நாங்கள் மூவரும் அவருக்கு போதுமானவர்கள், மேலும் அவரை இன்னொருவரை அழைத்து வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று மூவரும் ஒருமனதாக கூறினர்.






பலரை திருமணம் செய்யும் நடைமுறை


பலதார மணம் என்பது ஒரு சமூக மற்றும் திருமண நடைமுறையாகும், இதில் ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை திருமணம் செய்து கொள்கிறார். பலதார மணம் அல்லது பாலியமோராஸ் (polyamorous) என்பது பல மனைவிகளைக் கொண்ட குறிப்பிட்ட நடைமுறையாகும், அதே சமயம் பாலியண்ட்ரி என்பது பல கணவர்களைக் திருமணம் செய்யும் நடைமுறையாகும். இந்த நடைமுறை சர்ச்சைக்குரிய ஒன்று ஆகும், மேலும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இது சட்டவிரோதமாக கருதப்படுகிறது.