ஈரானில் உள்ள ஆண் ஒருவர் தன்னுடைய ஆணுறுப்பில் AA பேட்டரி ஒன்றைச் செலுத்தியதால், தற்போது தோல் மாற்று அறுவை சிகிச்சை பெற்றுள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை கோரி வந்துள்ள 49 வயது ஆண் ஒருவர் தன்னுடைய ஆணுறுப்பில் சுமார் 24 மணி நேரங்களாக பேட்டரி சிக்கியிருந்ததைத் தெரிவித்துள்ளர்.
எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பாதிக்கப்பட்டவரின் ஆணுறுப்பில் இருந்து மருத்துவர்களால் பேட்டரியை வெளியில் எடுக்க முடிந்துள்ளது. எனினும், சில மாதங்களுக்குப் பிறகு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் ஏற்படுவதாகவும், முழுமையாக சிறுநீர் கழிக்க முடியவில்லை எனவும் அதே நபர் மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இந்த சிகிச்சைக்காக ஸ்கேன் எடுக்கப்பட்டதில், அவரது சிறுநீர்க் குழாயில் அதிதீவிரமான தளும்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிறுநீர், விந்து ஆகியவை ஆணுறுப்பின் வழியாக வெளியேறுவதைத் தடுப்பதாகவும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தத் தளும்பு பேட்டரியில் இருந்த வேதிப் பொருள்களின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கருதினாலும் அதன் முழுமையான காரணம் என்ன என்பதைக் கண்டறிய முடியவில்லை.
மேலும், பாதிக்கப்பட்ட நோயாளியின் ஆணுறுப்பில் பேட்டரி நுழைந்தது எப்படி என்ற கேள்விக்கும் எந்தப் பதிலையும் நோயாளி தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை. மேலும் பாலியல் விளையாட்டு, கருத்தடை சாதனம், குடிபோதையில் விளையாட்டு என வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பாதிக்கப்பட்ட நோயாளி மன நோயால் பாதிக்கப்படவில்லை என்பதையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், பாதிக்கப்பட்ட நபர் தற்போது குணமடைந்துள்ள நிலையில், அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை மேற்கொள்ளும் போது எடுக்கப்பட்ட ஆய்வில் பேட்டரிகள் ஒருவரின் ஆணுறுப்பில் நீண்ட காலம் இருந்தால் அது நோய்த் தொற்று, குடல் புழு ஆகியவற்றோடு விறைப்புத் தன்மை குறைபாடு ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
நிரந்தரமான ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் பாதிக்கப்பட்ட நோயாளியில் ஆணுறுப்புக்கும், ஆசன வாய்ப் பகுதிக்கும் இடையிலான தசையைக் கிழித்து சிறுநீரகப் பாதையில் சிகிச்சை அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பேட்டரியை வெளியில் எடுத்தவுடன், அவரது கன்னம், உதடு ஆகிய பகுதிகளில் இருந்து தோல் எடுத்து அதனை வைத்து தோல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 3 வாரங்கள் கண்காணிக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். எனினும், 6 மாதங்களுக்குப் பிறகு அவர் பரிசோதிக்கப்பட்டு தளும்புகள் தென்பட்டுள்ளன. கடந்த மாதம், 37 வயதான ஆண் ஒருவரின் ஆணுறுப்பில் இருந்து இரும்பு ஸ்ட்ரிங் ஒன்று இதே மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.