உலகிலே சுயநலமற்ற அன்பு அதிகமானவர்களாக இருப்பவர்கள் குழந்தைகள். குழந்தைகள் தங்களது சிறு வயதிலே விட்டுக்கொடுக்கும் குணமும், பகிர்ந்து உண்டு வாழும் பழக்கம் உடையவர்களாகவே வளர்கிறார்கள். ஆனால், வளரும்போது அவர்களைச் சுற்றியுள்ள சமூகமும், அவர்களது வளர்ப்பு முறையும் அவர்களை சில நேரங்களில் மாற்றிவிடுகிறது.
இந்த நிலையில், ஒரு குழந்தை ஒன்று தனக்கு கிடைத்த உணவை குயில்களுக்கு ஊட்டி விடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நான்கு குயில்கள் வயலின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறது. அங்கே அமர்ந்துள்ள குழந்தையின் அருகே சென்ற அந்த குயில்களுக்கு அந்த குழந்தை தன்னுடைய உணவை குச்சி மூலமாக அந்த நான்கு குயில்களுக்கும் பகிர்ந்து ஊட்டிவிடுகிறது. பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடையச் செய்யும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பலரும் இந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், அந்த குழந்தையை பாராட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்