இலங்கை புத்தள பகுதியில் இன்று காலை 11.44 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சேதம் ஏதும் ஏற்படாததால் அப்பகுதி மக்கள் அச்சப்பட வேண்டாம் என பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 முன்னதாக பிப்ரவரி 10 ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 3 ஆகவும் பின்னர் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆகவும் இரண்டு நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் புத்தள மற்றும் வெல்லவாய பிரதேசத்தில் ஏற்பட்டது. தொடர்ந்து இலங்கையில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.