பனாமாவின் பசிபிக் கடற்கரையில் போகா சிக்கா நகருக்கு அருகே நேற்று 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


உள்ளூர் நேரப்படி காலை 5:18 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் மையப்பகுதி போகா சிக்காவிற்கு தெற்கே 44 மைல் (71 கிலோமீட்டர்) தொலைவில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எட்டு மைல் (13 கிலோமீட்டர்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


பனாமாவின் சிவில் பாதுகாப்பு அலுவலகம் இந்த நிலநடுக்கத்தில் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அருகில் உள்ள கொய்பா தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சிவில் பாதுகாப்பு அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குடிமைத் தற்காப்பு இயக்குனர் கார்லோஸ் ரம்போ செய்தியாளர்களிடம் கூறுகையில், நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்புகள் மற்றும் உயிர் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்  சேகரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.  துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அடிக்கடி உலகில் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.  


நேற்றைய தினம் ஃபிலிப்பைன்ஸின் விகா கடலோர பகுதிகளில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 120 கிமீ (74  மைல்) தொலைவில், சுமார் 45 கிமீ ஆழத்தில் நிலைகொண்டிருந்தது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (European Mediterranean Seismological Centre (EMSC)) வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் சில தினங்களுக்கு முன் பசிபிக் பெருங்கடலில் ஓரத்தில் தென் அமெரிக்க கண்டத்தின் வடக்கு மூலையில் இருக்கும் சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 15 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாண்ட்டியாகோ நகரின் தென்மேற்கு பகுதியில் சுமார் 328 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. 


கடந்த மார்ச் 29ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் காபூலின் கிழக்கு பகுதியில்  4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5.49 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து 85 கி.மீ தொலையில் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி சாலையில் முகாமிட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் காபூலை சுற்றி இருக்கும் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


Donald Trump: ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் .. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது


ரொம்ப குறைவா தூங்குறீங்களா? இந்த பிரச்சனை வரும் அபாயம் இருக்கு.. ஆய்வு சொல்வது என்ன?