ஆஸ்துமா என்பது நுரையீரலைத் தாக்கக் கூடிய ஒரு நோய். சுவாசக் குழாயில் உள்ள தசைகள் வீங்கிப்போய், சுவாசிப்பதே சிரமமாக இருக்கும்.


தூக்கம் என்பது நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் உடலின் ஒரு செயலாகும். உடலின் செயல்கள் மற்றும் மனநல நிலையை தூக்கத்துடன் தொடர்புடையவை என குறிப்பிடுகிறார்கள்.  


ஆஸ்துமாவுக்கும் தூக்கத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை என்று கூறி ஒரு மருத்துவ இதழில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. பொதுவாக ஆஸ்துமாவிற்கு சிகரட் புகை, கயிறு துகள், மரத்தூள், செல்லப் பிராணிகளின் முடி, சுவாசிக்கும் காற்றில் இருக்கும் மாசு, அடிக்கடி மாறும் காலநிலை,மன அழுத்தம், வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை, சளித்தொல்லை, தும்மல் பிரச்னை, பரம்பரை காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆஸ்துமா அதிகரிப்பதற்கும் குறைவதற்கும் தூக்கம் நிச்சயமாக ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.


நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்ற தலை  சாய்த்திருப்பீர்கள். ஆனால் தூக்கமே வந்திருக்காது. நம்மளுடைய அன்றாட வாழ்வில் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டு தான் இருக்கும்.  நம்முடைய சிந்தனைகளாளே தூக்கம் வராமல் இருக்கும். இன்னொரு காரணம் இரவில் சாப்பிட்ட உணவாகக் கூட இருக்கலாம். இரவு உணவு சரியில்லை என்றால் கூட  நிச்சயம் தூக்கத்தை கலைக்கக் கூடும். அதனால் என்ன செய்வது என்று பலரும் யோசனை செய்வீர்கள்.  மனதை ஒருமுகப்படுத்துவது என்பது புதுமுயற்சி. அதுவும் கை கொடுக்கவில்லை என்றால் அது ஒரு நோயாக இருக்குமோ என பலர் யோசனை செய்வீர்கள்.


ஆம் தூக்கமின்மை ஒருவகை நோய்தான். ஆரோக்கியமான உடலுக்கு ஆழ்ந்த தூக்கம் என்பது அவசியமான ஒன்று. அப்போது தான் உடல் உறுப்புகள் அதற்குரிய வேலைகளை சரியாக செய்து உடலை சரியாக பராமரிக்கும். இல்லையேனில் எதிர்விளைவுகளை உண்டாக்கி நோய்களை ஏற்படுத்தும். இன்சோம்னியா என்கிற தூக்கமின்மை நோயாலும் பலர் அவதிப்படுகின்றனர். 


நன்றாக தூங்கினாலே போதும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வு கட்டும். அப்படியொரு தீர்வு ஆஸ்துமா நோயாளிகளுக்கும் கிட்டும் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள். இதற்காக 10 ஆண்டுகளாக 17836 தனிநபர்களிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சி முடிவானது பிஎம்ஜே ஓபன் ரெஸ்பிரேட்டரி ரிசேர்ச் என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. ஆரோக்கியமற்ற தூக்க பழக்கவழக்கம் வளர்ந்த நபர்களில் ஆஸ்துமாவை அதிகரிப்பது அந்த ஆய்வில் உறுதியானது. அதே நேரம் முறையான தூக்கம் ஆஸ்துமாவை குறைப்பதும் உறுதியானது. ஆகவே ஆஸ்துமா நோயாளிகளை பரிசோதிக்கும் போதே அவர்களுடைய தூக்க பழக்கவழக்கங்களையும் அறிந்து ஒழுங்குபடுத்தினால் சிகிச்சைக்கு கூடுதல் பலன் கிடைக்கும்.


தூக்கம் என்பது நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் உடலின் ஒரு செயலாகும். உடலின் செயல்கள் மற்றும் மனநல நிலையை தூக்கத்துடன் தொடர்புடையவை என குறிப்பிடுகிறார்கள்.  


தூக்கமும் உணவும்..


ஆழ்ந்த தூக்கம் இல்லையென்றால் அது நம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவாக கூட இருக்கலாம். அதனால் தூங்குவதற்கு முன்பு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதன்படி , காஃபி, மது, சிகரெட் இவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோன்று தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இரவில் கட்டாயம் அளவான உணவுகளை உண்ண பழங்கிக் கொள்ளுங்கள். லாப்டாஃப், டிவி, செல்போன் போன்றவற்றை இரவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.