8000 ஆண்டுகள் பழமையான மனிதனின் மண்டை ஓட்டினை அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது கண்டுபிடிக்கப்பட்ட மனிதர்களின் எச்சங்களில் மிகவும் பழமையான ஒன்று என்று கூறியுள்ளனர்


அமெரிக்காவின் ரென்வில்லி மாகாணத்தில் கடந்த கோடைகாலத்தின் போது மின்னெசோட்டா ஆற்றுப்படுக்கையின் மீது பயணம் செய்த இரண்டு பேர் ஒரு மனித மண்டை ஓட்டை கண்டுள்ளனர். அது காணாமல் போன யாருடைய மண்டை ஓடாவது இருக்கலாம், அல்லது கொலை செய்யப்பட்டவருடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதனை மருத்துவ சோதனையாளர் மற்றும் எப்ஃபிஐ அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அங்கு அந்த மண்டை ஓட்டின் மீது நடத்தப்பட்ட கார்பன் பகுப்பாய்வில் அந்த மண்டை ஓடானது கிமு 5500 மற்றும் கிமு6000 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இளைஞனின் மண்டை ஓடு என்பது தெரிய வந்துள்ளது.


அந்த இளைஞரின் தலையில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று மானுடவியலாளர்கள் கூறியுள்ளனர்.




இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்திருந்த ஷெரிஃப் ஸ்காட் என்பவர் அத்துடன் புகைப்படங்களையும் இணைத்திருந்தார். முன்னோர்களின் எச்சங்களை வெளியிடுவது கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பூர்வகுடி அமெரிக்கர்களின் கண்டனத்திற்கு உள்ளானதால் அந்த பதிவை அவர் நீக்கியிருக்கிறார்.




அந்த மண்டை ஓடானது இன்னும் அப்பகுதியில் வாழும் அமெரிக்க பழங்குடியினரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என்று கத்லீன் ப்ளூ என்ற பேராசிரியர் கூறியுள்ளார். மேலும், மண்டை ஓட்டுக்கு உரிய அந்த நபர் இப்போது மின்னசோட்டாவாக இருக்கும் அந்த பகுதியில் சில ஆண்டுகளாக அவர் தங்கியிருக்கலாம் என்றும்   அந்த நபர்  தாவரங்கள், மான், மீன், ஆமைகள் ஆகியவற்றை உண்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். ஏனெனில், பாலூட்டிகள், காட்டெருமைகளை உண்பவராக இருந்திருந்தால் தொடர்ச்சியாக இடம் பெயர்ந்திருக்கக் கூடும். ஏனெனில், 8,000 ஆண்டுகளுக்கு முன்பு மின்னசோட்டாவைச் சுற்றி பலர் அலைந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால், நான் சொன்னது போல், பனிப்பாறைகள் அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பின்வாங்கிவிட்டன என்று ப்ளூ கூறியுள்ளார்.




அதே பகுதியில் 13000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று அகஸ்தனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண