Anbumani Ramadoss: அதிமுகவுடனான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


நெய்வேலி என்.எல்.சி முற்றுகைப் போராட்டத்தின் போது பாமகவினர் பொது அமைதிக்கு எதிராக செயல்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நெல்லை பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாமக 2024 மக்களவைத் தேர்தலுக்கு டெல்லியில் (பாஜகவில்) கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் (அதிமுக) கூட்டணியில் இல்லை எனவும், 2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாமக ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைப்போம். அதற்கான வியூகங்களை 2024 மக்களவைத் தேர்தலில் வகுப்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.