குழந்தைகளுக்கு எப்போதும் விளையாடுவதில் அவ்வளவு பேரானந்தம். அவர்கள் எந்த பொருளைப் பார்த்தாலும் அதை வைத்து விளையாட வேண்டும் எண்ணம் இருக்கும். பல குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களையெல்லம் வைத்து கொண்டு விளையாடுவது வழக்கம். அப்படி,விளையாடும்போது அது விபரீதத்தில் முடியும் அபாயமும் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் நடந்துள்ளது.


அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரில் வசிப்பவர் டீஜா பென்னட். இவர் 'ஷாப்பிங்' சென்று விட்டு, வீட்டுக்குச் செல்ல, தன், 3 வயது மகனை காரின் பின் இருக்கையில் உட்கார வைத்து விட்டு, காரை ஓட்ட தயாரானார். அப்போது, அங்கிருந்த தன் தந்தையின் துப்பாக்கியை எடுத்து, அந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.


அப்போது அந்தக் குழந்தை தவறுதலாக ட்ரிக்கரை அழுத்தியதால் துப்பாக்கி வெடித்தது.  டிரைவர் சீட்டில் இருந்த டீஜா மீது குண்டு பாய்ந்தது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் டீஜாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால், அந்த பெண் ஏற்கனவே இறந்ததாக மருத்துவரகள் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக, டீஜாவின் கணவர் ரோமல் வாட்சன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்து, சட்டவிரோதமாகவும், பாதுகாப்பற்ற முறையிலும் துப்பாக்கியை காரில் வைத்திருந்ததற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2015ம் ஆண்டில் இருந்து 2021 வரை 2,070 சம்பவங்களில் குழந்தைகள் துப்பாக்கியை வைத்து விளையாடியதில், பல விபரீத சம்பவம் நடந்துள்ளது. இவற்றில் பல குழந்தைகள் உட்பட, 765 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 


 


Watch Video: “எங்களை விட்டுப்பிரிந்த அன்பு மகள்...” : விஜயின் தங்கை குறித்து நெகிழ்ந்த எஸ்.ஏ.சி..


Exclusive: அன்னபூரணி நிகழ்ச்சிக்கு தடை விதித்த ஆசிரமம்... ‛நடத்திக் காட்டுறேன்...’ சினிமா பாணியில் சவால் வீடியோ வெளியிட்ட ‛அம்மா’!


 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண